நமது நாட்டின் வளரும் தலைமுறையினரின் எதிர்கால நலன் கருதி பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என கடந்த 01.07.2020 அன்று மஜக சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். நேற்று அவற்றை மத்திய் அரசு தடை செய்திருப்பதை வரவேற்கிறோம். பொழுதுபோக்கு என்ற பெயரில் குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் உளவியல் ரீதியாக அடிமைப்படுத்தி, அவர்களை தவறான திசையில் இந்த செயலிகள் வழிநடத்தின. இப்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதுடன், இது போன்ற அம்சங்களுடன் வேறு புதிய செயலிகளை வரவிடாமல் தடுப்பதும் மத்திய அரசின் கடமையாகும். இதற்கு மாற்றாக கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, கபடி போன்ற கள விளையாட்டுகளையும், நீச்சல் அடித்தல்,, சைக்கிள் ஓட்டுதல், கேரம் பலகை, விளையாடுதல் போன்ற இதர விளையாட்டுகளையும் தங்கள் பிள்ளைகளுக்கு ஊக்குவிக்க பெற்றோர்கள் முயல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 03.09.2020
Month:
கறம்பக்குடியில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!
கறம்பக்குடி : செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் மருத்துவ சேவை அணி சார்பில் நகர செயலாளர் சையது இப்ராஹீம், அவர்கள் தலைமையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கறம்பக்குடி வட்டாட்சியர், ஷேக் அப்துல்லா, கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் பால சுப்பிரமணியன், ஹோட்டல் சங்க தலைவர் K. சுரேஷ், தமுஎச தலைவர் இளைய மனோகரன், சுகாதார ஆய்வாளர் துரை மாணிக்கம், ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். இதில் மாவட்ட செயலாளர் முஹம்மதுஜான் , மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் காதர், நகர செயலாளர் ஆசை அப்துல்லா, நகர பொருளாளர் ஜியாவுதீன், நகர இளைஞரணி செயலாளர் முகமது மன்சூர், ஒன்றிய செயலாளர் முகம்மது அப்துல்லா, உள்ளிட்ட ஒன்றிய , நகர, நிர்வாகிகள் பங்கேற்றனர். இம்முகாமில் 700க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசம், வழங்கப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #கறம்பக்குடி_நகரம் #புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம் 02.09.2020
ஓமான் CBSE பள்ளிகளில் தமிழ் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடிதம்!
ஒமான் வாழ் தமிழ் உணர்வாளர்கள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். ஓமானில் தமிழ் மாணவர்களின் நலன் காக்கும் வகையில் இந்திய அரசின் #CBSE பாடத்திட்டத்தின்படி நடக்கும் பள்ளிகளில் தமிழையும் ஒரு மொழிப் பாடமாக இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தனர். இதனை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது... ஓமான் நாட்டில் வேலை மற்றும் தொழில் நிமித்தமாக சென்று வாழும் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். அங்கு மத்திய அரசின் CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் 22 இந்திய சமுக பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் சுமார் 46 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயில்கிறார்கள். இப்பள்ளிகளில் இந்திய மொழிகளான இந்தி, சமஸ்கிருதம், மற்றும் மலையாளம் ஆகியன மொழிப் பாடங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் ஐரோப்பிய மொழிகளான பிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மொழிகளும் இரண்டாம், மூன்றாம் மொழிப் பாடங்களாகவும் நடத்தப்படுகின்றன. 1972 முதல் செயல்படும் இப்பள்ளிகளில் ஒரு மொழிப் பாடமாக கூட செம்மொழியான தமிழ் அங்கீகரிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக ஒமான் வாழ் தமிழ் உணர்வாளர்களும், பெற்றோர்களும் பல முயற்சிகள் செய்தும் பலனில்லை. இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஓமான்
பட்டுக்கோட்டை வணிகர் சலீம் மரணம் குறித்த சந்தேகங்கள்!உரிய நடவடிக்கை எடுக்க மஜக துணை நிற்கும்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உறுதி!
செப் :1„ பட்டுக்கோட்டை வணிகர் சலீம் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக தஞ்சை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். நேற்று அவர்கள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து முறையிட்டனர். அவர் இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். பிறகு மாவட்ட SP சஞ்சய் சேகரிடமும் பேசினார். பிறகு அக்குடும்பத்தினரிடம் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள், இது குறித்து முதல்வர் அலுவலக கவனத்திற்கும் எடுத்து செல்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க மஜக துணை நிற்கும் என்றும் கூறினார். அப்போது துணை பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 31.08.2020