செப்.16, இன்று சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது நாகை சட்டமன்ற உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அவர்கள், நாகப்பட்டினத்தில் சட்டக் கல்லூரி துவக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். நாகப்பட்டினம் என்பது காவிரி டெல்டா மாவட்டங்களில் முக்கிய நகரமாகும். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களில் இடம்பெற்ற ஊராகும். ஆங்கிலெயர்கள் காலத்திலும் முக்கிய நகரமாக இருந்தது. சோழ மன்னர்கள் இங்கிருந்துதான் தென்கிழக்காசியாவை வெற்றி கொள்ள புறப்பட்டார்கள். எனவே , டெல்டா மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் ஒரு சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார். இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் திரு. #C_V_சண்முகம் அவர்கள், இது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார். மேலும் தனியார் யாரேனும் அங்கு சட்ட கல்லூரி அமைக்க முன் வந்தால் கூறுங்கள், அதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றார். அப்போது எழுந்த #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், பரிசீலிக்கப்படும் என்றதற்கு நன்றி என்றவர், நீங்கள் கூறிய இரண்டு கனிகளும் இனிக்கிறது. ஆயினும் முதலில் கூறிய கனி அதிகம் இனிப்பதால், அதையே தருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றதும் அமைச்சர் அதை புன்னகையோடு எதிர் கொண்டார். அதாவது தனியார்
Month:
நீட் தேர்வுக்கு எதிரான பதாகையை ஏந்தி சட்டசபைக்கு சென்ற மு தமிமுன் அன்சாரி MLA.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! தலைமை செயற்குழு உறுப்பினர்
தமிழ்நாடு இளைஞர் சங்கத்தினர் மஜக தலைமையகம் வருகை!
சென்னை.செப்.14, இன்று தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தின் தலைவர் மதன் தலைமையில் அவ்வமைப்பின் நிர்வாகிகள் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகம் வந்து பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து பேசினர். மஜக-வின் பணிகள் தங்களுக்கு முன் மாதிரியாக இருப்பதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் கூறினர். தொடர்ந்து மஜக-வின் போராட்டங்களில் இவ்வமைப்பு தோழர்கள் பங்கேற்று வருவதும், தமிழக இளைஞர்களை சமூக நீதியின் திசையில் அழைத்து செல்லும் பணியிலும் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் வளர்ச்சி பெற்றிட வாழ்த்துக்களை கூறிய பொதுச்செயலாளர் அவர்கள், தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING தலைமையகம் 14-09-2020
தூத்துக்குடியில் மஜக சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம்.!
தூத்துக்குடி .செப்.14., மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக மஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்காத்தான் கிளை சார்பில் கிளை செயலாளர் தமீம் அன்சாரி, தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகமது தாரிக், முன்னாள் கிளைச் செயலாளர் சதாம் உசேன், ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசூர குடிநீரை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ,கிளை பொருளாளர் முகமது ரிபாயில்,கிளை து. செயலாளர் அப்துல் அஜிஸ், முகமது சஹாப்தீன் மற்றும் முகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தூத்துக்குடி_மாவட்டம் 13-09-2020