சென்னை.செப்.14,
இன்று தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தின் தலைவர் மதன் தலைமையில் அவ்வமைப்பின் நிர்வாகிகள் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகம் வந்து பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து பேசினர்.
மஜக-வின் பணிகள் தங்களுக்கு முன் மாதிரியாக இருப்பதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் கூறினர்.
தொடர்ந்து மஜக-வின் போராட்டங்களில் இவ்வமைப்பு தோழர்கள் பங்கேற்று வருவதும், தமிழக இளைஞர்களை சமூக நீதியின் திசையில் அழைத்து செல்லும் பணியிலும் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் வளர்ச்சி பெற்றிட வாழ்த்துக்களை கூறிய பொதுச்செயலாளர் அவர்கள், தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறினார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
தலைமையகம்
14-09-2020