நாகையில் சட்டக்கல்லூரி அமைக்கப்படுமா? சட்டமன்றத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA, கேள்வி!!
Month:
இளைஞர்களை ஈர்க்கும் மஜக! கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள்.!
செப்:17., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரத்தில் இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். நாகர்கோவில் மாநகர இளைஞரணி செயலாளர் சமீர், அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர் பிஜ்ரூள் ஹபீஸ் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, மாவட்ட துணை செயலாளர் முஜிப் ரகுமான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகர செயலாளர் அமீர் கான், மாநகர துணை செயலாளர் அஷ்ரப் அலி, மாநகர பொருளாளர் ஐயப்பன், மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது ஷாஜித், திருவிதாங்கோடு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகர்கோவில்_மாநகரம் #கன்னியாகுமரி_மாவட்டம். 16.09.2020
மஜக மாநில இளைஞரணி நடத்தும் “இந்திய அரசியலும் இளைஞர்களின் கடமையும்” இணையவழி கருத்தரங்கம்
பொதுப்போக்குவரத்து ஓட்டுனர்களின் குறைகளை சரி செய்ய வேண்டும்!! தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்த மஜகவினர்!!
தென்காசி : செப் 16., தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பாக தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள காய்கறி வணிக வளாகம் மாற்றி அமைக்க வேண்டியும், கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பொதுப் போக்குவரத்து ஓட்டுனர்களின் வாகன தவணைகளுக்கு கால அவகாசம் வழங்க கோரியும், மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன் அவர்களின் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட துணை செயலாளர்கள் ஆதம் பின் ஹனிபா, பண் பொழி அபுதாஹிர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சிலம்பாட்ட சாகுல், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மற்றும் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்து கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 15.09.2020
கறம்பக்குடியில் மஜக மருத்துவச்சேவை அணியின் சார்பில் கபசுர குடிநீர்!
செப்.16, புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவச் சேவை அணியின் சார்பில் அதன் நகர செயலர் சையது இப்ராஹிம் தலைமையில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை எதிரில் நடைப்பெற்ற இம்முகாமில் சுமார் 600 க்கு மேற்பட்ட நபர்கள் அருந்தி பயனடைந்தனர். இதில் மஜக மாவட்ட , ஒன்றிய , நகர நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கறம்பக்குடி_நகரம். #புதுக்கோட்டை_மேற்கு