மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால் பாளையத்தில் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி பொதுமக்கள் அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளை செயலாளர் ஈஜாய்ஸ் அஹமது தலைமையில், தேசிய கொடியை கிளை பொருளாளர் எஸ்.முகமது சுஹைல் ஏற்றிவைத்தார்கள். பின்னர் மஜக மாவட்ட மகளிரணி செயலாளர் எம்.ஆயிஷா பேகம் அவர்கள் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினார்கள். தகவல்; #மஜக_தகவல்_அதொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம் 15-08-2020
Month:
74 வது சுதந்திர தினம்.! மஜக ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பில் தேசிய கொடியேற்று விழா!!
ஈரோடு:ஆக.15., 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகரத்தின் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி துணை பொதுச் செயலாளர் சையது அஹமது பாருக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அந்தியூர் சத்தி கோபி வட்டார ஜமாஅத்துல் உலமா பொருளாளர் ஷபிக் ஆலம் ஹஜ்ரத் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட, நகர, அணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆசிப், அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 15.08.2020
74வது சுதந்திர தினம்! மஜக திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் தேசிய கொடியேற்றி முககவசம் வழங்கப்பட்டது.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்டம் பொத்தக்குடியில் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய கொடியை ஜமாத் தலைவர் S.A.மஹதும் மைதீன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள் மேலும் பொதுமக்களுக்கு முககவசத்தை குவைத் மண்டல பொருளாளர் S.I.சதக்கத்துல்லா விநியோத்தார்கள். மேலும் கிளைச்செயலாளர் P.M.A நத்தர் கனி, கிளை பொருளாளர் A.ஜலாலுதீன், S.முஹம்மது உசேன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். தகவல்; #மஜக_தகவல்_அதொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம் 15-08-2020
74வது சுதந்திர தினம்.!மஜக சார்பில் கன்னியாகுமரியில் தேசிய கொடியேற்று விழா!!
74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மஜக மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் பச்சை தமிழகம் கட்சி நிறுவனர் திரு. சுப உதயகுமார், அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து சுதந்திர போராட்டங்களில் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி செயலாளர் நவாஸ் அன்வர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஷெரீப், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன் தாஸ், மாநகரச் செயலாளர் அமீர்கான், மாநகர பொருளாளர் ஐயப்பன், மாநகர துணைச் செயலாளர் அஷ்ரப் அலி, மா நகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஷாஜி உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 15-08-2020
அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த வேலூர் மஜகவினர்! சுதந்திர தினத்தன்றும் இடைவிட சேவையில் மஜகவினர்.!
வேலூர்.ஆகஸ்டு.15., நாடு முழுவதும் 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், கேரளா மாநிலம் மலப்புறத்தை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு (6 யூனிட்) கேரளா மாநிலம் கேலிகட் மாவட்ட சேர்ந்த 20 வயது இளைஞருக்கு (7 யூனிட்) Bone marrow transplantation எலும்பு மஜ்ஜை மாற்று அவசர அறுவை சிகிச்சைக்காக வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற மஜகவினர் 13-யூனிட் இரத்த தானம் செய்தனர். அச்சமயம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்மணிக்கு அவசர அறுவை சிகிச்சைக்கும் இரத்தம் தேவைபடுவதாக அவரின் கணவர் சார்பில் கேட்டு கொண்டதற்கு இணங்க மஜகவினர் மேலும் 2-யூனிட் இரத்த தானம் செய்தனர். இரத்ததானம் பெற்றவர்களின் உறவினர்கள் மஜகவினருக்கு நன்றி கூறியதுடன், இது ஈடு இணையற்ற சேவை என்றும், சாதி மதம் பாராமல் இக்கட்டான நேரத்தில் மஜக-வினர் ஆற்றும் பணியை பாராட்டுவதாக கூறினர். மேலும் தேவையை உணர்ந்து மருத்துவமனைக்கு உடனடியாக இத்தனை நபர்கள் வருகை தந்து இரத்ததானம்