கொரோனா நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் கார் ஒட்டுனர்களும், இதர வாடகை வாகன ஒட்டுனர்களும் முக்கியமானவர்கள். குறிப்பாக கடனுக்கு கார் வாங்கி அதில் உழைத்து வருமானம் ஈட்டியவர்கள், இன்று மாதத் தவணை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். அநியாயமாக ஏறி வரும் பெட்ரோல், டீசல் விலையால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு இது மேலும் வாழ்வியல் நெருக்கடிகளை உருவாக்கி உள்ளது. இந்த நெருக்கடியான காலத்தில் மாதத் தவணைகள் கட்ட தேவையில்லை என்றும், செப்டம்பர் மாதம் முதல் செலுத்தினால் போதும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதை எந்த நிதி நிறுவனமும் பொருட்படுத்தாமல், மாதத் தவணை கேட்டு நெருக்கடி கொடுப்பதால், பல ஒட்டுனர்கள் தற்கொலை செய்துள்ளதும், இப்படி தினமும் தற்கொலைகள் தொடர்வதும் அதிர்ச்சியளிக்கிறது. வாடகை கார் ஒட்டுனர்கள், சிறிய ரக சுமையுந்து ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என பலரும் இதில் அடக்கம். எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதோடு, இவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் மனிதாபிமானத்தோடு உதவிட வேண்டும். மேலும் ஊரடங்கு முடியும் வரை சாலை வரிகளையும் ரத்து செய்யவேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 23.07.2020
Month:
ஐயா நல்லக்கண்ணு & இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் பற்றியும் தரக்குறைவாக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை தேவை – மஜக
திருப்பந்துருத்தியில் மூன்றாம் கட்டமாக மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!
ஜூலை.22, தஞ்சை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவையாறு ஒன்றியம் திருப்பந்துருத்தி கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மூன்றாம் கட்டமாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் காங்கிரஸ் வடக்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம், திமுக நகர செயலாளர் அஹமத் மைதீன், அதிமுக நகர செயலாளர் தவக்கல் பாட்ஷா, நாம் தமிழர் மாவட்ட தலைவர் முஹம்மது அலி, திருவையாறு தொகுதி இணைச் செயலாளர் சாதிக் பாட்சா, வணிகர் சங்க தலைவர் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வியாபாரிகள், ஓட்டுநர்கள், பொதுமக்கள் என சுமார் 300 க்கும் அதிகமான நபர்கள் அருந்தி பயனடைந்தனர். இதில் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு (எ) S.ஹபீப் ரஹ்மான், கிளை செயலாளர் முகமது காலித், பொருளாளர் அசார், துணைச் செயலாளர்கள் பாரிஸ், சலீம் அக்தர், திபு சுல்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விநியோகித்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவையாறு_ஒன்றியம் #தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
MJTS தலைமையக நியமன அறிவிப்பு.! மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்
MJTS தலைமையக நியமன அறிவிப்பு.! மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக, 1) மாவட்ட தலைவராக, S. முகம்மது குஞ்சாலி, அலைபேசி; 9442117958 2) மாவட்டச் செயலாளராக, D. ஜகுபர் சாதிக், அலைபேசி; 7826918241 3) மாவட்டப் பொருளாளராக, Y. இர்ஷாத் அஹமது அலைபேசி; 8220650705 4) மாவட்ட துணைத் தலைவராக, N. அஜ்மீர் கான், அலைபேசி; 6385696767 மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) ரங்கிஸ் (எ) S. செய்யது அபுதாகீர். அலைபேசி; 9566694714 2) M.வெள்ளைச்சாமி, போன் - 9698036355 3) M.ஜகுபர் அலி, அலைபேசி; 9566715114 ஆகியோர் பொதுச்செயலாளர் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; சலிமுதீன் #தலைவர் #மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம் 22-07-2020
கல்வியில்_புதிய_திசைகளை_கண்டறியுங்கள்! – மு.தமிமுன் அன்சாரி MLA., பொதுச் செயலாளர், மஜக
கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய கல்வியாண்டை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நாம் முன்வைக்கும் முக்கிய வேண்டுகோள் என்னவெனில், புதிய வாய்ப்புகளை தரும் கல்விப்பிரிவுகளை தேடி செல்லுங்கள் என்பதே. உதாரணத்திற்கு, மீன்வள அறிவியல் (B.FSc.,) படிப்பு ! 900 கி.மீ கடற்கரை கொண்ட தமிழகத்தில், கடல் தொழில் சார்ந்த வருமானங்களை ஈட்டித் தரும் 4 ஆண்டுகால படிப்பு இது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிகமான வேலை வாய்ப்புகளை தரக்கூடியது. அதுபோல் வேளாண்மை துறை சார்ந்த படிப்புகளுக்கு B.Sc.,(Agri) மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. மத்திய,மாநில அரசுப்பணிகளுக்கு செல்ல ஆர்வமுடையோர் இந்த படிப்பை முதுநிலை வரை தேர்வு செய்வது சிறந்தது. வேளாண்மை கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தாவரவியல் (B.Sc., Botany) படிப்பை தேர்வு செய்து முதுநிலை வரை படிப்பது வாழ்க்கைக்கும், நாட்டிற்கும் நல்லது. B.E படிப்பில் Agriculture Engineering என்ற படிப்பும் புதிய வாசல்களை திறந்திருக்கிறது. விவசாயம் மற்றும் தோட்டக்கலை செழிக்க உலகம் எங்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு பெரும் நிதி செலவழிக்கப்படும் நிலையில், இத்துறையில் அதிக சம்பளத்தில் எளிதில் வேலை வாய்ப்புகள் காத்திருக்க்கின்றன. அது போல் கால்நடை அறிவியல் துறையும் முக்கியமானது. B.VSc., என்ற 4