மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்டச் செயலாளராக, S.பகுருதீன் அலைபேசி; 8898533545 மாவட்ட பொருளாளராக, M.முகம்மது அன்சாரி அலைபேசி; 7530081832 மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) M.அப்துல் அஜிஸ் அலைபேசி; 9842093377 2) R.சீனிவாசன் அலைபேசி; 9488879950 3) A. காதர் இப்ராஹிம் அலைபேசி; 9943735572 ஆகியோர் (MJVS) மாநில நிர்வாகிகளின் பரிந்துரையை ஏற்று நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 26-07-2020
Month:
MKP கத்தார் மண்டலம் சார்பாக தமிழகர்களை மீட்டு தயாகம் அனுப்பும் பணிகள் தீவிரம்!
ஜூலை.26., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பாக கத்தாரில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்து கொடுத்து தாயகம் அனுப்பி வைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று "நான்காம் கட்டமாக" 11 தமிழர்கள் தாயகம் செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த கத்தார் மண்டல (MKP) நிர்வாகிகள், தாயகத்திற்கு அவர்களை வழியனுப்பி வைத்தனர். மேலும் தமிழகத்தில் மஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமான நிலைய சேவைக்குழுவை தொடர்பு கொண்ட கத்தார் மண்டல நிர்வாகிகள் அங்கு வரும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும் படி கேட்டுக்கொண்டனர். தகவல், #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #MKP_IT_WING #கத்தார்_மண்டலம். 25/7/2020
BC, MBC, BCM மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்காதே – சமூக வலைதள போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு
நீலகிரியில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்!!
நீலகிரி:ஜூலை.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு சேவை அரசியலின் பால் தமிழகம் முழுவதும் சாரை சாரையாக இளைஞர்கள், மாணவர்கள், உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி கிழக்கு மாவட்டம் உதகையை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர். நீலகிரி கிழக்கு மாவட்ட அமைப்புக் குழு நிர்வாகிகள் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைப்புக்குழு தலைவர் N. காலிப், மாணவர் இந்தியா மாநில செயலாளர் பெரியார் கார்த்திக்,T.கமாலுதீன், K.s. ஹமீத், T.ரிஸ்வான், A.தப்ரேஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 25/07/2020
தென்காசியில் மஜகவில் இணைந்த மனிதநேய சொந்தங்கள்!!
தென்காசி: ஜூலை.25 மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு சேவை அரசியலின் பால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள், மாணவர்கள், தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர். மாவட்டச்செயலாளர் பீர் மைதீன், முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல் பாடுகள் குறித்து எடுத்து ரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் வாவை இனாயத்துல்லா, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சிலம்பாட்ட சாகுல், ஒன்றிய செயலாளர் அஹமது அலி, துணை செயலாளர் காதர்மைதீன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், ஒன்றிய மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க செயலாளர் ரவி, கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் உடனிருந்தனர்.. தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 24/07/2020