ஜூலை.26.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பாக கத்தாரில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்து கொடுத்து தாயகம் அனுப்பி வைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று “நான்காம் கட்டமாக” 11 தமிழர்கள் தாயகம் செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த கத்தார் மண்டல (MKP) நிர்வாகிகள், தாயகத்திற்கு அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
மேலும் தமிழகத்தில் மஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமான நிலைய சேவைக்குழுவை தொடர்பு கொண்ட கத்தார் மண்டல நிர்வாகிகள் அங்கு வரும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும் படி கேட்டுக்கொண்டனர்.
தகவல்,
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#MKP_IT_WING
#கத்தார்_மண்டலம்.
25/7/2020