ஜூலை.08, தஞ்சை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவையாறு ஒன்றியம், திருப்பந்துருத்தியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 'கபசுரக் குடிநீர்' வழங்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் குமார் அவர்கள் கலந்து கொண்டு விநியோகித்து துவக்கி வைத்தார். முதற்கட்டமாக வழங்கப்பட்ட இக்குடிநீரை வியாபாரிகள், ஓட்டுநர்கள், பொதுமக்கள் என சுமார் 250க்கும் மேற்பட்டோர் அருந்தி பயனடைந்தனர். இதில் தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அஹமது கபீர் வழிகாட்டலில் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டாம்பி என்கிற S. ஹபீப்ரஹ்மான், நகரச் செயலாளர் முகமது காலித், பொருளாளர் அசார், துணைச் செயலாளர் பாரிஸ் மற்றும் மஜக செயல்வீரர்கள் திரளாக பங்கேற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவையாறு_ஒன்றியம் #தஞ்சைமாநகர்மாவட்டம்.
Month:
மஜக கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்!!
ஜூலை:08., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநிலச் செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கோவை சம்சுதீன், ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், அனி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய கிளைகளை உருவாக்குவது குறித்தும், விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு அதற்கென பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், KA.பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்டச்செயலாளர் நூருல்அமீன், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, மாவட்ட பொருளாளர் பிரோஸ், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உசேன், மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், வணிகர்சங்க மாவட்ட பொருளாளர் நவ்பல் பாபு, விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 07.07.2020
திருச்சி மஜக சார்பில் கபசுரகுடிநீர் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் !
ஜூலை.08, திருச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்வார்தோப்பு பகுதியில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அபு தலைமையில் கபசுர குடிநீர் விநியோகிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மஜக திருச்சி மாவட்ட செயலாளர் பாபுபாய் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். மேலும், திருச்சி மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். முககவசங்கள் குறித்த அக்கறையின்றி வரும் பொதுமக்களிடம் மாஸ்க் வழங்கி, சமூக விலகலை பின்பற்றுதல் மற்றும் சுய தனிமைப்படுத்தி கொள்ளுதல் மூலமாக தான் கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என எடுத்து கூறி விழிப்புணர்வு செய்கின்றனர். தொடர்ந்து மேற்கூறிய நிகழ்விலும் சமூக விலகல் மற்றும் முக கவசத்தின் அவசியம் குறித்து எடுத்து கூறப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சேக்தாவுத், மாவட்ட துணைச் செயலாளர்கள் பகுருதீன், காதர், ஜமாலுதீன், தர்ஹா பாரூக், மாவட்ட இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அப்பாஸ், MJVS மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்தீக் மற்றும் ஆழ்வார்தோப்பு கிளை நிர்வாகிகள் இஸ்மாயில், உசேன், நாசர் மற்றும் ஜாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம்.
திண்டுக்கல் கீரனூரில் உதயமானது மஜக!
ஜூலை.08, திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியம் கீரனூர் பேரூரை சார்ந்தவர்கள் மஜக வின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். மஜக கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் C.A. சாந்து முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறி கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில், மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திண்டுக்கல்_மாவட்டம். 07/07/2020
குடியாத்தம் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்
வேலூர்.ஜூலை.07., உலகெங்கிலும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் சூல்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் குடியாத்தம் நகரின் பல்வேறு பகுதிகளில் நகரச் செயலாளர் S.அனீஸ் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் பலருக்கும் வழங்கப்பட்டது. இப்பணிகளோடு, கொரோனா நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நகரம் முழுவதும் மஜக-வினர், பொதுமக்கள் அனைவரும் சமூக விலகலையும், முககவசம் அணிவது, இல்லங்களில் சுய தனிமைப்படுத்துதல் போன்றவை மட்டுமே கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாக்கும் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.. இந்நிகழ்வில் மாவட்டப்பொருளாளர் I.முனவ்வர் ஷரிப் மற்றும் நகர துணைச் செயலாளர் சலிம், இளைஞர் அணி செயலாளர் முஹம்மது கவுஸ், சாதிக், பிலால்,பயாஸ், பக்ரு ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 07-07-2020