ஜூலை.08,
தஞ்சை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவையாறு ஒன்றியம், திருப்பந்துருத்தியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ‘கபசுரக் குடிநீர்’ வழங்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் குமார் அவர்கள் கலந்து கொண்டு விநியோகித்து துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக வழங்கப்பட்ட இக்குடிநீரை வியாபாரிகள், ஓட்டுநர்கள், பொதுமக்கள் என சுமார் 250க்கும் மேற்பட்டோர் அருந்தி பயனடைந்தனர்.
இதில் தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அஹமது கபீர் வழிகாட்டலில் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டாம்பி என்கிற S. ஹபீப்ரஹ்மான், நகரச் செயலாளர் முகமது காலித், பொருளாளர் அசார், துணைச் செயலாளர் பாரிஸ் மற்றும் மஜக செயல்வீரர்கள் திரளாக பங்கேற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING #திருவையாறு_ஒன்றியம்
#தஞ்சைமாநகர்மாவட்டம்.