ஜூலை:08.,
கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநிலச் செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கோவை சம்சுதீன், ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், அனி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய கிளைகளை உருவாக்குவது குறித்தும், விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு அதற்கென பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், KA.பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்டச்செயலாளர் நூருல்அமீன், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, மாவட்ட பொருளாளர் பிரோஸ், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உசேன், மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், வணிகர்சங்க மாவட்ட பொருளாளர் நவ்பல் பாபு, விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
07.07.2020