கன்னியாகுமரி செப்டம்பர். 26,
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதில் முதலாவதாக அழகிய மண்டபம் பகுதியில் இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநில பொருளாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இரண்டாவது நிகழ்வாக நடுக்கடை ஜங்ஷன் பகுதியில் கபசுர குடிநீர் பொது மக்களுக்கும், காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்.
மூன்றாவது நிகழ்வாக திரு விதாங்கோடு கிளை அலுவலகம் பார்வையிடப்பட்டு நிர்வாகிகளுக்கு கட்சியின் வளர்ச்சி பற்றியும் கொள்கை பற்றியும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளரும்
மாநில துணைச் செயலாளருமான காயல் பட்டினம் சாகுல் அமீது, மாவட்ட செயலாளர் பிஜிரூள் ஹபீஸ்,மாவட்ட பொருளாளர் G.சர்ச்சில், மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிஹர் அலி மாவட்ட துணை செயலாளர்கள் முஜிபுர் ரஹ்மான்,
சாதிக் அலி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஷரிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பாவலர் ரியாஸ், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நாகர்கோவில் நகர செயலாளர் அமீர் கான் பொருளாளர் ஐயப்பன், திரு விதாங்கோடு கிளை செயலாளர் பிரின்ஸ், பொருளாளர் சமீர் அன்சாரி, மற்றும் கிளை நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம்
26.09.2020