அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அண்ணன் அவர்கள் கொரணா பாதிப்புக்குள்ளாகியுள்ளார். அவர் நலம் பெற்று வழக்கமான பணிகளை மேற்கொள்ள மஜக சார்பில் பிரார்த்திக்கிறோம். அது போல் அதிமுக, திமுக வை சேர்ந்த கொரணா பாதித்த MLA நண்பர்களும் பூரண சுகம் பெற பிரார்த்திக்கிறோம்
Month:
திண்டுக்கல் சரக DIG அவர்களுடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!!
ஜூலை:08., திண்டுக்கல் சரக புதிய டிஐஜி யாக பொறுப்பேற்றுள்ள திரு, முத்துசாமி IPS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி, C.A. சாந்து முஹம்மது, அவர்கள் தலைமையில் மஜக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பின் போது டிஐஜி அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மஜக வினரின் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் காவல் துறையினருக்கு பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் வர்த்தகர்களும், முழு ஒத்துழைப்பு வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் சர்புதீன், ஷாஜஹான், சையது பாபு, பழனி நகர நிர்வாகிகள், சையது காதர், சேக் அப்துல் காதர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திண்டுக்கல்_மாவட்டம் 08/07/2020
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ்ஆப் போலீசுக்கு தடை – மஜக வரவேற்பு
அதிரையில் MJTS தொழிற்சங்க இரண்டாவது கிளை தொடக்கம்! பொதுமக்களுக்கு கபசுரகுடிநீரை விநியோகித்த தொழிற்சங்கத்தினர்!
ஜூலை.08, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) இரண்டாவது ஆட்டோ ஸ்டாண்ட் அதிரை ஈ.சி.ஆர் கிங் ஷாப்பிங் மால் அருகில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு MJTS நகர செயலாளர் முகமது ஆரிப் அவர்கள் தலைமையில் தாங்கி சங்க பதாகையை திறந்து வைக்க மஜக மாவட்ட துணைச் செயலாளர் அதிரை சேக் அவர்கள் கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து இனிப்பு மற்றும் கபசுர குடிநீரை தொழிற்சங்கத்தினர் பொதுமக்களுக்கு விநியோகித்தனர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), நகர செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் அஷ்ரப், துணைச் செயலாளர்கள் ஹாஜா மர்ஜூக், அஹமது அஸ்கர், மாணவர் இந்தியா நகர செயலாளர் மஸ்தான், MJTS ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #அதிரை_நகரம், #தஞ்சைதெற்குமாவட்டம்.
மஜகவின் மனிதநேய பணிகள்..!
ஜூலை.8., நெல்லை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த சங்கரன்கோவிலை சேர்ந்த கோதர் மைதீன் அவர்கள் சிகிச்சை பலனிற்றி மரணமடைந்ததை அடுத்து, இறந்தவரின் உறவினர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க மஜக நெல்லை மாவட்டச் செயளாலர் நெல்லை நிஜாம், மாவட்டப் பொருளாளர் பேட்டை மூஸா ஆகியோர் மருத்துவமனை சென்று அரசு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்திசெய்து உடலை பெற்று சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம்.