ஜூலை:08.,
திண்டுக்கல் சரக புதிய டிஐஜி யாக பொறுப்பேற்றுள்ள திரு, முத்துசாமி IPS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி, C.A. சாந்து முஹம்மது, அவர்கள் தலைமையில் மஜக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது டிஐஜி அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மஜக வினரின் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் காவல் துறையினருக்கு பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் வர்த்தகர்களும், முழு ஒத்துழைப்பு வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில்
திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் சர்புதீன், ஷாஜஹான், சையது பாபு, பழனி நகர நிர்வாகிகள், சையது காதர், சேக் அப்துல் காதர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திண்டுக்கல்_மாவட்டம்
08/07/2020