ஜூலை.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களை பரமக்குடி நகரம், எமனேஸ்வரம் கிளை நிர்வாகிகள் கிளை செயலாளர் ஹபீப் ரஹ்மான் தலைமையில் சந்தித்தனர். நிர்வாகிகளிடம் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், கொரோனா பேரிடர் காலத்தில் நடைபெற்ற மக்கள் நல பணிகள் குறித்தும் மாநிலப் பொருளாளர் விரிவாக கேட்டறிந்தார். பின்னர் மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்த சந்திப்பில் மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் முஹம்மது ஹனிபா, பரமக்குடி நகரச் செயலாளர் எமனை சாகுல், மாணவர் இந்தியா எமனேஸ்வரம் கிளை செயலாளர் ஜமில், இஸ்லாமிய கலாச்சார பேரவை எமனேஸ்வரம் கிளை செயலாளர் செய்யது சதகி, மற்றும் பாஷித் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #ராமநாதபுரம்_மாவட்டம் 13-07-2020
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு! நெல்லை மாவட்ட அணி நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட அணி நிர்வாகிகளாக, இளைஞரணி மாவட்டச் செயளாலராக M.முத்து மஹதும் ஜமீண் M.G.P.3 வது தெரு, பேட்டை அலைபேசி; 8300095969 மனித உரிமை பாதுகாப்பு அணி மாவட்டச் செயளாலராக N.அப்பாஸ் பங்களா தெரு, பேட்டை அலைபேசி; 9087318794 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 12-07-2020
வெளிநாட்டு தப்லீக்கினர் தங்க மாற்று ஏற்பாடு! மஜக கோரிக்கை ஏற்பு!
ஜூலை.12, வெளிநாடுகளை சேர்ந்த 129 தப்லீக் ஜமாத்தினர் விசா விதி மீறலை காட்டி கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீன் பெற்ற நிலையில் அவர்கள் புழல் சிறார் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இது மத்திய அரசின் வழிகாட்டல் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால், இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு, தப்லீக் பிரமுகர் கோடம்பாக்கம் ஜமாலுதீன் அவர்கள் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அதன் பேரில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்சனையை மஜக எடுத்துச் சென்றது. இந்நிலையில் இன்று காலை அவர்கள் அனைவரையும், சென்னையில் உள்ள ஹஜ் இல்லத்தில் தங்கிட அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ள செய்தியை, அதிகாரிகள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களிடம் தெரிவித்தனர். காலையில் முதல்வர் அவர்களுக்கு மஜக சார்பில் நன்றி தெரிவித்து விட்டு, மதியம் இது தொடர்பாக தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் அவர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் அந்தந்த நாட்டு தூதர்களிடம் இவர்களை சட்டப்படி ஒப்படைக்கும் பணியை செய்வதாகவும் தலைமைச் செயலாளர் அவர்கள் உறுதியளித்துள்ளார். இதற்கும் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொண்டார். வெளிநாட்டு தப்லீக்கினர் குறித்த இச்செய்தியை பொதுச்செயலாளர்
மனிதநேய சேவையை தொடரும் மஜக மதுரை விமான நிலைய சேவைக்குழு!
மதுரை.ஜூலை:12, துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்களில் தமிழர்கள் வருகை தந்தனர். அவர்களில் தூத்துக்குடியை சேர்ந்த பயணிகளின் உறவினர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை விமான நிலைய சேவைக் குழுவை தொடர்பு கொண்டு உதவிநாடினர். அதனடிப்படையில் விமான நிலையத்தை அடைந்த மஜக மதுரை மாவட்டச்செயலாளர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் அப்துல்மஜித், மதுரை வடக்கு பகுதி பொறுப்பாளர் பாபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் கேபிள் பாஷா, உள்ளிட்ட சேவைக்குழு பொறுப்பாளர்கள் அவர்களை வரவேற்று சொந்த மாவட்டத்தில் தனிமைப்படுத்தி கொள்ள ஏதுவாக அதிகாரிகளிடம் பேசி உரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்து உறவினர்களுடன் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மஜக-வினரின் இம் மகத்தான பணியை பயணிகளும், அவர்களின் உறவினர்களும் வெகுவாகப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_மாவட்டம். 11-07-2020