
ஜூலை.12,
வெளிநாடுகளை சேர்ந்த 129 தப்லீக் ஜமாத்தினர் விசா விதி மீறலை காட்டி கைது செய்யப்பட்டனர்.
பின்னர் ஜாமீன் பெற்ற நிலையில் அவர்கள் புழல் சிறார் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
இது மத்திய அரசின் வழிகாட்டல் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால், இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு, தப்லீக் பிரமுகர் கோடம்பாக்கம் ஜமாலுதீன் அவர்கள் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதன் பேரில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்சனையை மஜக எடுத்துச் சென்றது.
இந்நிலையில் இன்று காலை அவர்கள் அனைவரையும், சென்னையில் உள்ள ஹஜ் இல்லத்தில் தங்கிட அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ள செய்தியை, அதிகாரிகள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களிடம் தெரிவித்தனர்.
காலையில் முதல்வர் அவர்களுக்கு மஜக சார்பில் நன்றி தெரிவித்து விட்டு, மதியம் இது தொடர்பாக தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் அவர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அந்தந்த நாட்டு தூதர்களிடம் இவர்களை சட்டப்படி ஒப்படைக்கும் பணியை செய்வதாகவும் தலைமைச் செயலாளர் அவர்கள் உறுதியளித்துள்ளார். இதற்கும் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொண்டார்.
வெளிநாட்டு தப்லீக்கினர் குறித்த இச்செய்தியை பொதுச்செயலாளர் அவர்கள், தப்லீக் பிரமுகர் கோடம்பாக்கம் ஜமாலுதீன், கூட்டமைப்பை சேர்ந்த மன்சூர் காஸிஃபி, பஷீர் ஹாஜியார், தர்வேஸ் ரஷாதி மற்றும் TNTJ மாநிலச் செயலாளர் அன்சாரி ஆகியோரிடமும் தெரிவித்தார்.
கூட்டமைப்பு நிர்வாகிகள் மஜக-வின் முயற்சியை பாராட்டியதோடு, வெளிநாட்டு தப்லீக்கினர் ஹஜ் இல்லத்தில் தங்குவதற்கான அடிப்படை பணிகளையும், இதர ஒத்துழைப்புகளையும் உடனே செய்து தருவதாக கூறினர்.
கடந்த 4 நாட்களாக இது தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு நல்கிய திரு.செந்தில் IAS, திரு.விஜயகுமார் IAS, திரு. சித்திக் IAS ஆகியோருக்கும் மஜக சார்பில் பொதுச்செயலாளர் அவர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
இன்று இரவுக்குள் அவர்கள் அனைவரும் ஹஜ் இல்லம் வந்திட ஏற்பாடு நடக்கிறது. அங்கு தூய்மை பணிகள் தாமதமானால் நாளை காலை வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பல தலைவர்கள் அறிக்கைகள் மூலம் அரசுக்கு கவனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் மஜக பொதுச்செயலாளர் அவர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#தலைமையகம்
12-07-2020