Month:
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள்.!
தென்காசி: ஜூலை.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். மாவட்டச்செயலாளர் பீர் மைதீன், முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல் பாடுகள் குறித்து எடுத்து ரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் வாவை இனாயத்துல்லாஹ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 15/07/2020
மரணித்த மஜக ஊழியர் ஹாஜா இஸ்மாயில் வீட்டில் பொதுச் செயலாளர்!
ஜூலை.15, கடந்த வாரம் சவூதி தம்மாம் நகரில் மாரடைப்பால் மரணம் அடைந்த மஜக சகோதரர் ஹாஜா இஸ்மாயில் அவர்களின் இல்லத்திற்கு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சென்றார். ஏனங்குடியில் உள்ள அவரின் இல்லத்தில், அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பற்றுள்ள ஒரு நிர்வாகியை கட்சி இழந்துள்ளதாக கூறிய அவர், அவர் பிள்ளைகள் மஜக அங்கமாக கருதப்பட்டு அவர்களின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறினார். அவருடன் மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், மாவட்ட துணைச் செயலாளர் முன்ஷி யூசுப்தீன், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், துணைச் செயலாளர் அன்சாரி, ஆதலையூர், கேதாரிமங்கலம், ஏனங்குடி கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம்.
ஈ பாஸ் வழங்குவதை எளிமைப்படுத்த வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!
கொரோனா நெருக்கடி காரணமாக போக்குவரத்தில் பல கட்டுப்பாடுகள் பேணப்படுகிறது. நாட்டு நலன் கருதி இதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள் ஆனாலும் ஈ-பாஸ் எனும் மின்னனு அனுமதி சீட்டு பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது. திருமணம், மரணம், மருத்துவம் ஆகியவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதால், இதர அத்தியாவாசியமான பணிகளுக்கு செல்பவர்கள் பயணம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மின்னனு அனுமதி சீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள், அதிக பட்சமாக ஒரு வாரத்திற்குள் அனுமதி பெற்றிடும் வகையில் இதன் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேயஜனநாயககட்சி 15.07.2020
சார்ஜாவிலிருந்து தாயகம் வந்த தமிழர்களை வரவேற்ற மஜக மதுரை விமான நிலைய சேவைக்குழு!
மதுரை.ஜூலை:15, சார்ஜாவிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்களில் தமிழர்கள் வருகை தந்தனர். அவர்களில் நாகப்பட்டினத்தை சேர்ந்த பயணிகளின் உறவினர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA அவர்களை தொடர்பு கொண்டு உதவிநாடினர். அதனடிப்படையில் பொதுச்செயலாளரின் ஆலோசனைப்படி விமான நிலையத்தை அடைந்த மஜக மதுரை மாவட்டச் செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் கனி, உள்ளிட்ட சேவைக்குழு பொறுப்பாளர்கள் அவர்களை வரவேற்று சொந்த மாவட்டத்தில் தனிமைப்படுத்தி கொள்ள ஏதுவாக அதிகாரிகளிடம் பேசி உரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்து உறவினர்களுடன் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மஜக-வினரின் இம் மகத்தான பணியை பயணிகளும், அவர்களின் உறவினர்களும் வெகுவாகப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.. தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_மாவட்டம். 14-07-2020