சென்னை.ஜனவரி.11., இன்று, சென்னை புதுப்பேட்டை மக்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசினார். அப்போது கூறியதாவது... ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் போராடியபோது, பல்கலைக்கழக துணைவேந்தர் அனுமதி பெறாமலேயே டெல்லி போலிஸ் உள்ளே நுழைந்து அராஜகம் செய்தது. விளக்கை அணைத்து விட்டு மாணவிகளின் விடுதிகளுக்கும் சென்று கோழைத்தனமாக தாக்கினார்கள். மாணவர்களை கழிவறைகளுக்குள் சென்று தேடித் தேடி தாக்கினார்கள். ஆனால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து, ABVP குண்டர்கள் முகமூடி அணிந்து தாக்கினார்கள். இது நன்கு திட்டமிடப்பட்ட வன்முறையாகும். நாங்கள்தான் மாணவர்களை தாக்கினோம் என்று இந்து ரக்க்ஷா தளம் என்ற அமைப்பு மார் தட்டுகிறது. மேலும் இதே போல் பிற பல்கலைக்கழகங்களுக்குள்ளும் சென்று மாணவர்களை தாக்குவோம் என பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். ஆனால் தாக்கியவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. டெல்லி போலிஸ், JNU மாணவர்களை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. டெல்லி போலிஸ் ஒரு தலைபட்சமாக நடக்கிறது. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே அதற்கு காரணம். குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக
Month:
ஊராட்சி மன்ற துணைத் தலைவராக மஜக-வை சேர்ந்த Amk.முஹம்மது அம்ஜா தேர்வு.
தேனிமாவட்ட மஜக சார்பாக வாகனங்களில் NO CAA NRC NPR ஸ்டிக்கர் ஒட்டி எதிர்ப்பு பிரச்சாரம்!!
ஜன.11., தேனி மாவட்டம் கம்பத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரியும், தமிழக மக்களுக்கு இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேனி மாவட்ட மஜக சார்பில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி நூதன எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது.. கம்பம் மஜக மாவட்ட தலைமையகம் முன் நடைபெற்ற பிரச்சாரத்தில் NO NRC,NPR ,CAA வாசகத்துடன் இருசக்கர வாகனம்,ஆட்டோ,லாரி போன்ற வாகனங்களில் வருபவர்களிடம் இச்சட்டம் குறித்து எடுத்துரைத்தனர். இது குறித்து கவனமாக கேட்ட பொதுமக்கள் இச்சட்டத்தில் மிகப்பெரிய அபாயம் உள்ளது ஆகவே எங்களுடைய வாகனத்தில் இந்த ஸ்டிக்கரை ஒட்டுங்கள் என தெரிவித்து தாங்களாக முன்வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேனி மஜக வினரின் இச்செயலை வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தேனி_மாவட்டம் 10.01.2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக. S.உமர் பாருக் த/பெ: சக்கரை முகம்மது 2/4-A3 திருமோகடர் ரோடு Y.ஒத்தகடை மதுரை மாவட்டம். அலைபேசி: 9578169153 நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி. 11-01-2020
ஒருசார்பு முழக்கங்களை தவிர்த்து பொது முழக்கங்களை எழுப்புவோம்! : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!
ஜன 10 இன்று சென்னை சைதாப்பேட்டையில் CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது.. மத்திய அரசுக்கு எதிரான மக்களின் இப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. எனவே இதில் பங்கேற்கும் தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் . உங்கள் கருத்துகள் பிறரை போராட்டத்திற்கு ஆதரவாக மாற்றும் வகையில் இருக்க வேண்டும் . போராட்டங்களில் அனைவரும் முழங்கும் வகையில் பொதுவான முழக்கங்களை எழுப்ப வேண்டும் . ஒரு சார்பு முழக்கங்களையும், கொள்கை சார்ந்த முழக்கங்களை தவிர்க்க வேண்டும் . ஃபாஸிசத்தை ஒழிப்போம்; சமூக நீதி காப்போம் ஜெய்ஹிந்த், இந்தியா ஜிந்தாபாத், இன்குலாப் ஜிந்தாபாத், மக்கள் ஒற்றுமை ஒங்குக போன்ற முழக்கங்களை எழுப்புங்கள் அல்லது கை தட்டி ஆதரவுகளை வழங்குங்கள் . ஃ பாஸிஸ்டுகளுக்கு எதிரான இப்போராட்டம் இந்தியாவை பாதுகாக்க நடத்தப்படுகிறது எனவே, அனைவரையும் உள்ளடக்கிய இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை பொது தன்மையோடு முன்னெடுப்பதில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான மஜகவினரும் பங்கேற்றனர். சைதாப்பேட்டை பகுதியில் ஆர்ப்பாட்ட கூட்டம்