ஜன.11.,
தேனி மாவட்டம் கம்பத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரியும், தமிழக மக்களுக்கு இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேனி மாவட்ட மஜக சார்பில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி நூதன எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது..
கம்பம் மஜக மாவட்ட தலைமையகம் முன் நடைபெற்ற பிரச்சாரத்தில் NO NRC,NPR ,CAA வாசகத்துடன் இருசக்கர வாகனம்,ஆட்டோ,லாரி போன்ற வாகனங்களில் வருபவர்களிடம் இச்சட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.
இது குறித்து கவனமாக கேட்ட பொதுமக்கள் இச்சட்டத்தில் மிகப்பெரிய அபாயம் உள்ளது ஆகவே எங்களுடைய வாகனத்தில் இந்த ஸ்டிக்கரை ஒட்டுங்கள் என தெரிவித்து தாங்களாக முன்வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தேனி மஜக வினரின் இச்செயலை வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தேனி_மாவட்டம்
10.01.2020