JNU மாணவர்களை தாக்கியவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? முதமிமுன் அன்சாரி MLA கேள்வி


சென்னை.ஜனவரி.11.,

இன்று, சென்னை புதுப்பேட்டை மக்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசினார்.

அப்போது கூறியதாவது…

ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் போராடியபோது, பல்கலைக்கழக துணைவேந்தர் அனுமதி பெறாமலேயே டெல்லி போலிஸ் உள்ளே நுழைந்து அராஜகம் செய்தது. விளக்கை அணைத்து விட்டு மாணவிகளின் விடுதிகளுக்கும் சென்று கோழைத்தனமாக தாக்கினார்கள். மாணவர்களை கழிவறைகளுக்குள் சென்று தேடித் தேடி தாக்கினார்கள்.

ஆனால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து, ABVP குண்டர்கள் முகமூடி அணிந்து தாக்கினார்கள். இது நன்கு திட்டமிடப்பட்ட வன்முறையாகும்.

நாங்கள்தான் மாணவர்களை தாக்கினோம் என்று இந்து ரக்க்ஷா தளம் என்ற அமைப்பு மார் தட்டுகிறது. மேலும் இதே போல் பிற பல்கலைக்கழகங்களுக்குள்ளும் சென்று மாணவர்களை தாக்குவோம் என பகிரங்கமாக மிரட்டுகிறார்கள்.

ஆனால் தாக்கியவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

டெல்லி போலிஸ், JNU மாணவர்களை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

டெல்லி போலிஸ் ஒரு தலைபட்சமாக நடக்கிறது. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே அதற்கு காரணம்.

குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக டெல்லி உட்பட நாடெங்கும் போராட்டங்கள் தொடர்வதால்தான், ஜப்பான் பிரதமர் தொடங்கி பல நாட்டு தலைவர்கள் தங்களின் இந்திய வருகையை தொடர்ந்து ரத்து செய்து வருகின்றனர்.

இந்த போராட்டங்கள் தொடர்ந்து நீதி கிடைக்கும் வரை அமைதி வழியில் முன்னெடுத்து செல்லப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மன்சூர் காசிமி, தயாநிதி மாறன் MP, மவ்லவி தர்வேஸ் ரஷாதி, அன்பழகன் MLA உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம்
11-01-2020