https://www.facebook.com/700424783390633/posts/2190407517725678/ ஜன.01, அதிராம்பட்டிணத்தில், அஹமது அப்சல் - நபீலா, ஷபி அஹமது- ரூமைஜா, முஹம்மது பரீத்- ஆயிசா ஆகியோரின் திருமணம் அதிரை செக்கடி பள்ளிவாசலில் நடைப்பெற்றது. அதில் பங்கேற்று மஜக பொது செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கெதிராக பேசினார். உபி மாநிலத்தில் அறவழியில் போராடிய மக்களின் மீது துப்பாகி சூடு நடத்தி 21 உயிர்களை பறித்த ஆதித்யாவை கண்டித்து பேசினார். ஒரு சன்னியாசிக்கு மனித உயிர்களின் மதிப்பு தெரியுமா? என கேள்வி எழுப்பினார். குடியுரிமை இருந்தால் தான் வாழ்வுரிமை கிடைக்கும் எனவே அமைதி வழி போராட்டங்கள் மூலமே குடியுரிமையை நிலைநாட்ட முடியும் என்றார். சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சலாம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் ஹமீது ஜெகபர், MKP ஆஸ்திரேலியா மண்டல செயலாளர் அதிரை சர்புதீன், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, அதிரை நகர செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் து.செயலாளர் அரபாஃத், ஜப்பார், வக்கீல் நிஜாம், MJTS தொழிற்சங்க நிர்வாகிகள் செல்வம், ஹக், இப்ராஹிம், ஹாஜிஅலி உள்ளிட்ட நிர்வாகிகளும்
Month:
அனைத்து சமூக மக்களை ஒன்றிணைத்து தொடர் போராட்டம் நடத்த தீர்மானம்
இஸ்லாமிய இயக்கங்கள் சிறுபான்மைகட்சிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம்...! ஜனவரி.1, சென்னை அண்ணாசாலை மக்கா பள்ளிவாசலில் NRC, NCR, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த கட்ட போராட்ட வடிவங்கள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநிலப் பொருளாளர் ஹாரூன் ரசீது மற்றும் துணை பொதுச்செயலாளர் தைமிய்யா கலந்துக்கொண்டனர். மஜக மாநிலப் பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். CAA, NRC, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துவது, இச்சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களை ஒன்றினைத்து செயல்படுவது, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இச்சட்டங்களை தமிழகத்தில் அமுல்படுத்த கூடாது என்று கோரிக்கை அளிப்பது, NPR சட்டத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை. 01-01-2020 https://m.facebook.com/story.php?story_fbid=2190989064334190&id=700424783390633
கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாகையில் பிரம்மாண்ட பேரணி! மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
ஜனவரி 01 மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக, நாகப்பட்டினத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு கூட்டியிக்கம் சார்பில் பிரம்மாண்ட பேரணி எழுச்சியோடு நடைப்பெற்றது. பேரணி 4 மணி அளவில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, தேசிய கீதத்தோடு தொடங்கியது. பேரணியில் 650 அடி நீள இந்திய தேசிய கொடியை சுமந்து இளைஞர்கர்கள் முழக்கமிட்டவாறு வந்தனர். பெண்கள் தேசிய கொடிகளை கையில் ஏந்தி, சாரை - சாரையாக அணிவகுத்து வந்தனர். குழந்தைகளும் தேசிய கொடிகளை கையில் ஏந்தி திரண்டனர். பேரணி ஒரு முனையை கடக்க 45 நிமிடங்கள் ஆனது. நீயூஸ் 18 தொலைக்காட்சி பேரணியை நேரலை செய்ய, பிற ஊடகங்கள் உயரமான கட்டிடங்களில் இருந்தவாரு ஒலிப்பதிவு செய்தனர். பேரணியில் நாகையை சேர்ந்த பல்வேறு சமூக மக்களும் தன்னார்வத்தோடு கலந்துக் கொண்டது எல்லோரையும் உற்சாகப்படுத்தியது. பேரணி புதிய பேருந்து நிலையத்தை அடைந்ததும், பேரணி ஒருங்கிணைப்பாளர் நிஜாமுதீன் அன்வரி அவர்கள் தொடக்கஉறையாற்றினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும்போது "பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர்கள் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக போராடுவதை சுட்டிக்காட்டி பேசினார். மோடியும், அமித்ஷாவும் மக்களை மதத்தால் பிரிக்க நினைத்தனர்.