டிச 14., மத்திய அரசு தற்போது பாரபட்சத்துடன் நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பொதுமக்களும் கல்லூரி மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட தொடங்கியுள்ளனர். டெல்லி அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் புரட்சி வெடித்துள்ளது. இந்திய மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் இந்த சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும். இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரியும். கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் R.முஹம்மது அப்பாஸ், அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் ரபிதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் யாசர் அராபத், உமர்பாருக், பாரி, கோகுல், மற்றும் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_வடக்கு_மாவட்டம் 14.12.19
Month:
திருப்புத்தூரில் புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி..! மஜக ஆர்ப்பாட்டம்
சிவகங்கை.டிச.14.., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து ஈழத் தமிழர்கள், அண்டை நாடுகளிலிருந்து வரும் இந்திய வம்சாவளி முஸ்லிம்கள், நேபாளத்திலிருந்து வரும் கிறித்தவர்கள் உள்ளிட்டவர்களையும் புதிய குடியுரிமை சட்டத்தில் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற முழக்கங்களுடன், தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகரச் செயலாளர் சையது முகமது, மாவட்ட வர்த்தகம் அணி துணைச் செயலாளர் ராயல் ஜாபர் அலி, வருசை முகமது, முகமது ரசீத், அப்துல் மஜித், உதுமான் அலி, அப்பாஸ் மற்றும் தொண்டர்களும், ஜமாத்தார்களும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தகவல்;- #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம் 13-12-2019
புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தைஎதிர்த்து மஜக சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
#மஜகசார்பில்ஈரோட்டில்தடையைமீறி_ஆர்ப்பாட்டம்!! ஈரோடு:டிச.13., மத்திய அரசு பாரபட்சத்துடன் நிறைவேற்றிய புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சுல்தான் பேட்டை பள்ளிவாசல் அருகே மாநில துணைச் செயலாளர் பாபு ஷாகின்ஷா, அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஈழத்தமிழர்களுக்கு அண்டை நாடுகளிலிருந்து வரும் இந்திய வம்சாவளி முஸ்லிம்களுக்கு நேபாளத்திலிருந்து வரும் கிறிஸ்தவர்களுக்கு புதிய குடியுரிமை சட்டத்தில் குடியுரிமை வழங்குக என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பினர் மேலும் சட்ட நகலை கிழிக்க முற்பட்டபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சபிக் அலி, மாவட்ட பொருளாளர் முகமது அலி, மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது முஸ்தபா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிராஜ், பகுதி செயலாளர் பாபு, பஷீர், அப்துர்ரஹ்மான், பக்கீர் முஹம்மது, சபர் அலி, உள்ளிட்ட திரளான மஜக நிர்வாகிகளும் மற்றும் ஜமாத்தார்களும் பங்கேற்றனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடுகிழக்குமாவட்டம் 13.12.19
குடியுரிமை சட்டமா.? குடி கெடுக்கும் சட்டமா.? சத்தியமங்கலத்தில் மஜக – பிரம்மாண்டபேரணி
ஈரோடு.டிச.13.., இன்று வெள்ளிக்கிழமை மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பில் திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சை, திருச்சி, அரந்தாங்கி, கடலூர் என பல இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மஜக ஒருங்கிணைப்பில் ஜமாத்துகள், அமைப்புகள் ஆதரவோடு பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதற்கு மஜக துணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக் தலைமையேற்றார். நகரம் அதிர, குடியுரிமை சட்டமா? குடி கெடுக்கும் சட்டமா? என்பது போன்ற முழக்கங்களுடன் மக்கள் ஆவேசமடைந்தனர். ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கு! நேபாள கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கு! அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கு! என்பது போன்ற முழக்கங்களால் நகரமே அதிர்ந்தன. இந்நிகழ்வில் மஜக மாவட்டச் செயலாளர் ஷனவாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ஆசிப் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரும் கலந்து கொண்டனர். தகவல்;- #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடு_மேற்கு 13-12-2019
புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மஜக சார்பில் அடையாள எதிர்ப்பு முழக்௧ம்!
டிச.13, மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அடையாள முழக்கங்கள் மஜக மாவட்ட செயலாளர் முனைவர். முபாரக் அலி தலைமையில் இன்று (13/12/19) அறந்தாங்கி காமராசர் சிலை (டவுன் பள்ளிவாசல்) அருகில் நடைபெற்றது. இதில் மஜக மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி முன்னிலை வகிக்க மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் எதிப்பு முழக்கத்தை முன்மொழிந்து தொடங்கி வைத்தார். கலந்து கொண்டவர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க வேண்டாம். அண்டை நாட்டு முஸ்லிம்கள் மற்றும் ஈழநாட்டு தமிழர்களையும் சேர்த்து குடியுரிமை சட்டத்திருத்தம் வேண்டும் என்று முழக்௧ங்களை எழுப்பினர். இதில் கலாச்சார பேரவை செயலாளர் அப்துல் ஹமீது, நகர துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ், இளைஞர் அணிச் செயலாளர் அஹமது ரியாஸ், மருத்துவ அணிச் செயலாளர் அப்துல் கனி, சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் சாகுல் அமீது, மாணவர் அணிச் செயலாளர் கலந்தர் மைதீன், ஒன்றிய செயலாளர் நோக்கியா சாகுல், ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி உள்ளீட்ட பல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். நகர செயலாளர் ஜகுபர் சாதிக் வரவேற்புரையாற்ற மாவட்ட துணைச் செயலாளர் செய்யது