மார்ச்.21., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.முபாரக் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ராமச்சந்திரன் ஆகியோரை மஜக நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பெரியார் கார்த்தி தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் மன்சூர் , மாவட்ட துணைச் செயலாளர் ஹுசைன், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 21.03.2024.
தமிழகம்
தமிழகம்
மஜக தலைமையக அறிவிப்பு…
நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான மஜக தலைமை தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் அவர்களும், துணைத் தலைவராக மாநிலச் செயலாளர் நெய்வேலி. இப்ராகிம் அவர்களும் பணியாற்றுவார்கள் என தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதனுடன் அறிவிக்கப்படுகிறது. விரைவில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநில தொகுதிக்கும் தொகுதி செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவர். அவர்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை இப்பொறுப்பில் செயல்பாடுவார்கள். வேட்பாளருடன் கட்சி பணிகளை ஒருங்கிணைத்தல், கூட்டணி கட்சிகளுடன் தொடர்பை ஒழுங்குப்படுத்துதல், ஒரே தொகுதிக்குள் வரும் இரண்டு மாவட்ட நிர்வாகிகளை வழிநடத்துதல், பரப்புரை பணிகளை நேர் செய்தல், களப்பணிகளை கண்காணித்தல் ஆகிய பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். இவண், M. முகம்மது நாசர் பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 20.03.2024.
நாடாளுமன்ற தேர்தல் 2024… சென்னையில்… அமைச்சருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு….
மார்ச்.21., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும், ஊரக தொழிற்துறை அமைச்சருமான திரு. தா.மோ.அன்பரசன் அவர்களை மஜக தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத்தலைவர் ஆலந்தூர் கபீர், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஷீத், மாவட்டத் துணைச் செயலாளர் நாகூரான் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்சென்னை_கிழக்கு_மாவட்டம் 21.03.2024.
IBC தமிழ் ஊடக இஃப்தார் நிகழ்ச்சி…. மஜக தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு….
மார்ச்.21., IBC தமிழ் நிறுவனம் சார்பாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை அண்ணாநகரில் நடைப்பெற்றது. IBC நிறுவனம் சார்பாக நடைப்பெற்ற இந்நிகழ்வில் அனைத்து மதத்தினரையும் சேர்ந்தவர்களும், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், யூட்யூப் சேனல் பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், நெய்வேலி இப்ராஹீம், மாநில துணைச்செயலாளர் அஸாருதீன், வழக்கறிஞர் அணி செயலாளர் அமீன், துணைச்செயலாளர் ஸ்வாதீஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தென்சென்னை_மாவட்டம் 20.03.2024.
நாடாளுமன்ற தேர்தல் 2024… திருப்பூரில்… திமுக மாவட்ட செயலாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு….
மார்ச்.20., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக நேற்று (19.03.2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் MLA., அவர்களை மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் நெல்லை ரமேஷ், மாவட்ட அவை தலைவர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் பாபு, மஜக செயல்பாட்டாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும் திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ்குமார், தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி. நாகராஜ், மூன்றாம் மண்டல தலைவர் சி.கோவிந்தசாமி, பகுதி செயலாளர் மு.க.உசேன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுடன் மஜக நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர்கள் ராயல் பாட்ஷா, ஈஸ்வரன், ஷேக்அப்துல்லா, யாசர் பாரூக், மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் கீரனூர் பாபு,