மஜக தலைமையக அறிவிப்பு…

நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான மஜக தலைமை தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் அவர்களும், துணைத் தலைவராக மாநிலச் செயலாளர் நெய்வேலி. இப்ராகிம் அவர்களும் பணியாற்றுவார்கள் என தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதனுடன் அறிவிக்கப்படுகிறது.

விரைவில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநில தொகுதிக்கும் தொகுதி செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவர்.

அவர்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை இப்பொறுப்பில் செயல்பாடுவார்கள்.

வேட்பாளருடன் கட்சி பணிகளை ஒருங்கிணைத்தல், கூட்டணி கட்சிகளுடன் தொடர்பை ஒழுங்குப்படுத்துதல், ஒரே தொகுதிக்குள் வரும் இரண்டு மாவட்ட நிர்வாகிகளை வழிநடத்துதல், பரப்புரை பணிகளை நேர் செய்தல், களப்பணிகளை கண்காணித்தல் ஆகிய பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

இவண்,
M. முகம்மது நாசர்
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
20.03.2024.