மார்ச்.31., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர். இப்ராஹீம் பேசுகையில் சசிகாந்த் செந்தில் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மீஞ்சூர் கமால், மாவட்ட பொருளாளர் அப்ரார் ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #திருவள்ளூர்_நாடாளுமன்ற_தொகுதி #MJKitWING 30.03.2024.
தமிழகம்
தமிழகம்
வடசென்னையில்… வேட்பாளருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் மஜகவினர்….
மார்ச்.31., வடசென்னை நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கலாநிதி வீராசாமி அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டு வருகிறார். வேட்பாளருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட தொண்டர் படையினரும் இணைந்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இந்த தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூட வைப்பது மஜக-வினரின் கடமை என்று நிர்வாகிகளை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #தேர்தல்_பணிக்குழு #வடசென்னை_நாடாளுமன்ற_தொகுதி #MJKitWING 31.03 2024.
இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது செருப்புக்கு சமம் அல்ல… அது நெருப்புக்கு சமம்…
தாய்வீடு திரும்பல் வில்லிவாக்கம் பகுதியில் மஜகவில் இணைந்த மனிதநேய சொந்தங்கள்..
மார்ச்.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்த்து பல்வேறு தரப்பினர் மஜக-வில் இணைந்து வருகின்றனர். தலைமை நிர்வாகக் குழு வழிகாட்டலில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவாக எடுத்த தேர்தல் நிலையாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அனைவரையும் மஜக-வின் பக்கம் ஈர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வில்லிவாக்கம் சாதிக் தலைமையில் பலர் மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச்செயலாளருமான அஸாருதீன் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர். அவருடன் ஜாஹிர் ஹீசைன், குத்புதீன் சாதிக், சாஹுல் ஆகியோர் உடன் இணைந்தனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அபுதாஹீர், திருப்பூண்டி ஹக் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழிவ்நுட்ப_அணி #MJKitWING #மத்தியசென்னை_மாவட்டம் 31.03.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட துணைச் செயலாளராக, A. முகமது இஸ்மாயில் த/பெ; அப்துல் ஜப்பார் 117 காயிதே மில்லத் 2 தெரு, சங்கரன்கோவில் தென்காசி மாவட்டம் அலைபேசி; 90251 76465 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 31.03.2024.