ஏப்ரல்.22., தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மஜக நாகை மாவட்டம், ஏனங்குடி கிளையின் சார்பில் திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் அவர்கள் ஏற்பாட்டில் இன்று ஆலமரத்தடி கடைத்தெருவில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கும் இப்பணியை தொடர்ந்து கோடை காலம் முடியும் வரை தினமும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாணவர் இந்தியா மாநில பொருளாளர் நிசாத்,மாவட்ட துணை செயலாளர் பேபி ஷாப் பகுருதீன்,MJVS மாவட்ட செயலாளர் முத்து முகம்மது,மருத்துவ சேவை அணி மாவட்ட துணை செயலாளர் உமர் முக்தார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் அப்துல் மாலிக்,இளைஞரணி ஒன்றிய செயலாளர் பதுருதீன்,MJTS ஓன்றிய துணை செயலாளர் அக்ரம்,ஏனங்குடி கிளை நிர்வாகிகள் அர்சத்,நஸீம், அப்ஜல்,பாசித் மற்றும் நபில்,அபு சாஹித்,ஜாபீர்,பஃர்ஹான்,அனஸ்,சுஹைல்,அஸ்லம்,அனஸ், ஜாஃபர்,துஹ்பைல்,அர்சத், பர்ஹான்,யூசுப்,நிசார்,அப்சல்,தகசின் ,ஃபவாஸ் என திரளான மஜக வினர் கலந்து கொண்டு வினியோகித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம். 22.04.2024.
தமிழகம்
தமிழகம்
சேலத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்….
மார்ச்.28., சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாநில துணைச் செயலாளர் AJS.தாஜூதீன் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர். புதிதாக இணைந்த இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடைய தலைமையை ஏற்று மஜக-வில் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சேலம்_மாவட்டம் 22.04.2024.
கேரள பரப்புரையில் உற்சாக அலை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் அளவளாவி மகிழும் மலையாளிகள்…
ஏப்ரல்.22., மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இரண்டாவது நாளாக கேரள மாநிலத்தில் காங்கிரஸ் - IUML அங்கம் வகிக்கும் UDF கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அங்கு பொதுக்கூட்டங்கள், ROAD SHOW மட்டுமின்றி Family Meet up எனும் குடும்பங்கள் சங்கமிக்கும் பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஒரு வீட்டு வளாகத்தில் ஒன்று கூடுகின்றனர். அதில் தலைவர்கள் வருகை தந்து உரையாடுகின்றார்கள். மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முதல் பரப்புரையை கேரள காங்கிரஸின் எதிர்கட்சித் தலைவர் N.D.சதீசனுடன் பங்கேற்று மேடையேறினார். அதன் பிறகு 3 இடங்களில் Family Meet up எனப்படும் குடும்ப சந்திப்பு பரப்புரைகளில் பங்கேற்றார். அதில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் அவருடன் கைக் குலுக்கி தற்படம் (Selfi) எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர். அவரை பலரும் ஊடகங்கள் வழியும், YouTube வழியாகவும் பார்த்துள்ளதாக கூறி உரையாடினர். அவரை பற்றி காங்கிரஸ் பிரமுகர்கள் முன் கூட்டியே உற்சாகம் எழ அறிமுகம் செய்தனர். மஜக-வின் அரசியல் அணுகுமுறைகள், கொள்கை நிலைபாடுகள் குறித்தும் ஆர்வமுடன் கேட்டறிந்தனர். குடும்ப பரப்புரை சந்திப்புகள் மூலம் மஜக-வுக்கு கேரளாவில் நல்ல ஆதரவு தளம் உருவாகியுள்ளது
கேரளாவில்… Family Meet up பரப்புரை… மனிதாபிமான மற்றவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் பொன்னானி தொகுதியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
ஏப்ரல்.21., கேரளா மாநிலம் பொன்னானி நாடாளுமன்ற தொகுதியில் காலையில் மேடை பரப்புரையை மேற்கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மாலை நேரத்தில் 'குடும்ப சங்கமம் பரப்புரை' நிகழ்வில் பங்கேற்றார். கேரளா அரசியலில் குடும்பம், குடும்பமாக ஒன்று கூடி அமரும் வகையில் Family Meet up நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இன்று மாலை தென்னலா - வெந்நியர் பகுதியில் நடைபெற்ற பரப்புரையில் தலைவர் பேசினார். அவரது உரையை கேரள மாநில பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான ஜாவித் ஜாபர் உடனுக்குடன் மலையாளத்தில் மொழி பெயர்த்தார். அவரது உரையிலிருந்து... தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்து உங்களை தேர்தல் களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இது போன்ற தேர்தல் பரப்புரை சந்திப்புகள் எங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இந்த தேர்தல் களமும் அப்படிதான் வித்தியாசமானது. இது வழக்கமான தேர்தல் களம் அல்ல. ஜனநாயகத்திற்கும், ஃபாசிசத்திற்கும் இடையிலான போராட்ட களம். ஆட்சிக்கு யார் வரக்கூடாது என்பதற்காக நாம் அணிதிரண்டுள்ளோம். நாம் வாக்குச் சாவடிக்கு செல்வது வெறுமனே வாக்களிப்பதற்காக மட்டுமே என கருதி விடக்கூடாது. நாட்டை பாதுகாப்பதற்கு என்பதை உணர வேண்டும். இந்து - முஸ்லிம் - கிரிஸ்த்தவர் ஒற்றுமையை பாஜகவினர் சீர்குலைக்கிறார்கள். நாம் மக்களை ஒருங்கிணைக்க விரும்புகிறோம். சாதி-மத நல்லிணக்கம்தான் நம் உயரிய
வயநாடு பரப்புரை கேரளாவில் மஜக ஆலோசனைக் கூட்டம்…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரையை தொடங்கியுள்ளார். பொன்னானி, மலப்புறம், வயநாடு, நாடாளுமன்ற தொகுதிகளில் அவரது பரப்புரைக்கு UDF கூட்டணியின் நிர்வாகிகள் திட்டம் வகுத்து வருகின்றனர். இன்று காலையில் பொன்னானி தொகுதியில் முதல் கட்ட பரப்புரை முடிந்த பிறகு அடுத்த கட்ட பரப்புரைகள் குறித்து திட்டமிடும் பணிகள் தொடங்கியுள்ளது. மதியம் கோட்டக்கலில் கேரள மாநில பொறுப்பாளரும் மாநில துணைச் செயலாளருமான ஜாவித் ஜாபர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அப்போது காங்கிரஸ் பொறுப்பாளர் நாசர் அவர்களுடன் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அவர்களுக்கு பரப்புரை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர்கள் நாகை. முபாரக், நெய்வேலி.இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் பேராவூரணி.சலாம், மாநில இளைஞரணி பொருளாளர் கோவை பைசல்,கோவை தெற்கு மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ், நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, கேரள மாநில தேர்தல் பணி குழுவின் பொறுப்பாளர்கள் சைஜல், ஹாரிஸ், நாராயணன் ஆகியோர்கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கேரளா- தென்னிந்தியா 21.04.24.