கேரள பரப்புரையில் உற்சாக அலை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் அளவளாவி மகிழும் மலையாளிகள்…

ஏப்ரல்.22.,

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இரண்டாவது நாளாக கேரள மாநிலத்தில் காங்கிரஸ் – IUML அங்கம் வகிக்கும் UDF கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அங்கு பொதுக்கூட்டங்கள், ROAD SHOW மட்டுமின்றி Family Meet up எனும் குடும்பங்கள் சங்கமிக்கும் பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஒரு வீட்டு வளாகத்தில் ஒன்று கூடுகின்றனர்.

அதில் தலைவர்கள் வருகை தந்து உரையாடுகின்றார்கள்.

மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முதல் பரப்புரையை கேரள காங்கிரஸின் எதிர்கட்சித் தலைவர் N.D.சதீசனுடன் பங்கேற்று மேடையேறினார்.

அதன் பிறகு 3 இடங்களில் Family Meet up எனப்படும் குடும்ப சந்திப்பு பரப்புரைகளில் பங்கேற்றார்.

அதில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் அவருடன் கைக் குலுக்கி தற்படம் (Selfi) எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

அவரை பலரும் ஊடகங்கள் வழியும், YouTube வழியாகவும் பார்த்துள்ளதாக கூறி உரையாடினர்.

அவரை பற்றி காங்கிரஸ் பிரமுகர்கள் முன் கூட்டியே உற்சாகம் எழ அறிமுகம் செய்தனர்.

மஜக-வின் அரசியல் அணுகுமுறைகள், கொள்கை நிலைபாடுகள் குறித்தும் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.

குடும்ப பரப்புரை சந்திப்புகள் மூலம் மஜக-வுக்கு கேரளாவில் நல்ல ஆதரவு தளம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கேரளா – #தென்னிந்தியா
22.04.2024