கேரளாவில்… Family Meet up பரப்புரை… மனிதாபிமான மற்றவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் பொன்னானி தொகுதியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

ஏப்ரல்.21.,

கேரளா மாநிலம் பொன்னானி நாடாளுமன்ற தொகுதியில் காலையில் மேடை பரப்புரையை மேற்கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மாலை நேரத்தில் ‘குடும்ப சங்கமம் பரப்புரை’ நிகழ்வில் பங்கேற்றார்.

கேரளா அரசியலில் குடும்பம், குடும்பமாக ஒன்று கூடி அமரும் வகையில் Family Meet up நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இன்று மாலை தென்னலா – வெந்நியர் பகுதியில் நடைபெற்ற பரப்புரையில் தலைவர் பேசினார்.

அவரது உரையை கேரள மாநில பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான ஜாவித் ஜாபர் உடனுக்குடன் மலையாளத்தில் மொழி பெயர்த்தார்.

அவரது உரையிலிருந்து…

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்து உங்களை தேர்தல் களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இது போன்ற தேர்தல் பரப்புரை சந்திப்புகள் எங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

இந்த தேர்தல் களமும் அப்படிதான் வித்தியாசமானது.

இது வழக்கமான தேர்தல் களம் அல்ல. ஜனநாயகத்திற்கும், ஃபாசிசத்திற்கும் இடையிலான போராட்ட களம்.

ஆட்சிக்கு யார் வரக்கூடாது என்பதற்காக நாம் அணிதிரண்டுள்ளோம்.

நாம் வாக்குச் சாவடிக்கு செல்வது வெறுமனே வாக்களிப்பதற்காக மட்டுமே என கருதி விடக்கூடாது.

நாட்டை பாதுகாப்பதற்கு என்பதை உணர வேண்டும்.

இந்து – முஸ்லிம் – கிரிஸ்த்தவர் ஒற்றுமையை பாஜகவினர் சீர்குலைக்கிறார்கள்.

நாம் மக்களை ஒருங்கிணைக்க விரும்புகிறோம்.

சாதி-மத நல்லிணக்கம்தான் நம் உயரிய கலாச்சாரமாகும்.

நாட்டில் அமைதியை, சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்.

காஷ்மீரில் ஆசிபா என்ற 8 வயது குழந்தையை மதத்தின் பெயரால் கற்பழித்து கொன்றார்கள். அவர்களை இந்த ஃபாசிஸ்ட்டுகள் ஆதரித்தார்கள்.

மணிப்பூரில் கலவரத்தில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப் படுத்தப்பட்டார்கள்.

இதுவரை அங்கு பிரதமர் மோடி நேரில் போய் யாருக்கும் ஆறுதல் கூறவில்லை.

உ.பி. மாநிலத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அஹ்லாக் என்ற இளைஞரை கொன்றார்கள்.

விசாரணையில் அவர் வீட்டில் ஆட்டுக்கறி மட்டுமே இருந்ததாக தெரிய வந்தது.

ஆனால் அஹ்லாக்கின் உயிரை திரும்ப கொண்டு வர முடியாது. அவர்களது பெற்றோருக்கு யாரால் ஆறுதல் கூற முடியும்?

நான் என்ன சாப்பிட வேண்டும்? சாப்பிடக்கூடாது? என தீர்மானிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

உணவு உரிமையும், உண்ணும் உரிமையும் அவர் அவர் விருப்பத்திற்குரியது.

மாட்டுக்கறியின் பெயரால் வன் முறை செய்தவர்கள், மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனத்திடம் நன்கொடை பெற்றுள்ளார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவுக்கு வந்த போது மாட்டுக்கறி வைத்து உபசரித்தார்கள்.

இதுதான் இவர்களது அரசியல்.

இரக்கமற்ற, மனிதாபிமானம் இல்லாத இவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தினால் தான் அமைதி உருவாகும். அமைதி திகழ்ந்தால் வளர்ச்சி பெருகும். வளர்ச்சி இருந்தால் மகிழ்ச்சி பெருகும்.

நமது எதிர்கால தேசம் அப்படித்தான் வழிநடத்தப்பட வேண்டும்.

இதற்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நீங்கள் UDF வேட்பாளர் அப்துல் சமது சமதானிக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கேரளா – #தென்னிந்தியா
21.04.2024.