திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் மஜக வின் சார்பில் பேரிடர் மீட்பு குழு மீட்புப் பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளது. மீட்புக் குழுவினருக்கு மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களின் தலைமையில், ஊரின் பல்வேறு பகுதிகளை வலம் வந்து பார்வையிட்டனர். மேலும் பேரிடர் மீட்புக்குழு வினருக்கு பணிகள் குறித்து மாநில செயலாளர் தாஜ்தீன், அவர்கள் ஆலோசனை வழங்கினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாச்சிகுளம் #திருவாரூர்_மாவட்டம். #Cyclonenivar #களத்தில்_மஜக 25.11.2020
நிவர் புயல்
நாகூரில் கொட்டிய மழையில் மக்கள் மீட்பு! மஜக பேரிடர் மீட்பு குழு அதிரடி!
நவ 25 இன்று மதியத்திற்கு பிறகு நாகூரில் கடும் மழை கொட்டிய நிலையில், மஜக பேரிடர் மீட்பு குழுவினர் அதிரடியாக களம் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். வண்டிபேட்டை, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் குடிசை வாழ் மக்கள் மழையில் நனைந்தப்படி பரிதவித்து நின்றனர். அப்பொழுது களத்தில் நின்ற நாகூர் நகர மஜக மீட்பு குழுவினர். மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு தகவல் அளித்தனர். உடனே தாசில்தார், VAO உள்ளிட்ட அதிகாரிகளுடன் வந்து, அங்கு நின்ற மக்களை பாதுக்காப்பான இடத்திற்கு மீட்டு செல்ல அறிவுறுத்தினார். அனைவரும் NATIONAL பள்ளிக்கூடத்தில் தங்க ஏற்பாடானது. அதுபோல மணல்மேடு, பகுதியை சேர்ந்த மக்களும் அழைத்து வரப்பட்டது. மஜக பேரிடர் மீட்புக் குழுவினர் தாங்கள் ஏற்பாடு செய்த ஆட்டோக்களில் அவர்களை முகாமிற்கு அழைத்து சென்றனர். MLA அவர்கள் கலெக்டரிடம் பேசி கூடுதல் முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_பேரிடர்_மீட்பு_குழு #நாகை_மாவட்டம் #CycloneNivar #களத்தில்_மஜக #நிவர்_புயல்
நிவர் புயல் : நாகூரில் மஜகவினர் தயார் நிலை..!
நிவர் புயல் கரையை கடக்கவிருக்கும் இச்சூழலில், மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டம் நாகூரில் புயலை எதிர்கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட பல குழுக்களாக மஜகவினர் தயார் நிலையில் உள்ளனர், மேலும் சூறைக் காற்று மற்றும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்தும் வருகின்றனர். #CycloneNivar #களத்தில்_மஜக #நிவர்_புயல் #மஜக_பேரிடர்_மீட்புகுழு
நிவர் புயல் : வடசென்னையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் பாதிக்கப்பட்டவர்களை மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது நேரில் சந்தித்து உணவு விநியோகம்..!
நிவர் புயலால் பெய்து வரும் தொடர் அதி தீவிர கனமழை காரணமாக சென்னையில் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் வட சென்னை கிழக்கு மாவட்டத்தில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பல குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, அவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு தேவையான உணவுகளையும் விநியோகித்தார். பொருளாளர் உடன் மாநில துணை செயலாளர் ஷமீம் அகமது, மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் தாரிக், துறைமுகம் அலி, துறைமுகம் குப்பை சீனி, தமிம் அன்சாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #CycloneNivar #களத்தில்_மஜக 25-11-2020
நிவர் புயல் : செங்கல்பட்டு மாவட்டத்தில் களத்தில் மஜக.!
நிவர் புயல் தாக்கத்தினால் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதி தீவிர கனமழை மற்றும் சூறை காற்று வீசி வரும் காரணத்தினால், பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது மேலும் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு மற்றும் மழைநீர் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ளதால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்களுக்கு மேல் சாய்ந்து உள்ள மரங்களை வெட்டும் பணிகளிலும், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு சென்று மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டறிந்து உடனடியாக அதிகாரிகளை சந்தித்து மக்களின் தேவைகள் குறித்து எடுத்துரைத்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #CycloneNivar #களத்தில்_மஜக 25-11-2020