சென்னை.அக்.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது மற்றும் துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி, MJTS தலைவர் பம்மல் சலீம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் செங்கை வடக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் டிசம்பர் 31 வரை, தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்துவது குறித்தும், புதிய கிளைகள் கட்டமைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது, மேலும் மாவட்ட நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #செங்கைவடக்குமாவட்டம் 30.10.2020
மஜக ஆலோசனை கூட்டம்
மஜக சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம்! மஜக பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!
சேலம்:அக்.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் மெஹபூப்அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது மற்றும் அவைத் தலைவர் நாஸர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாய், துணை பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாருக், மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்ஷா, ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சேலம்_மாவட்டம் 27.10.2020
மஜக திருப்பத்தூர் மாவட்ட ஆலோசனை கூட்டம்! மஜக பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!
திருப்பத்தூர்.அக்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச்செயலாளர் ஜஹிருல் ஜமா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது மற்றும் அவைத் தலைவர் நாஸர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாய் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது J.M.வசீம் அக்ரம் உடனிருந்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பத்தூர்_மாவட்டம் 28.10.2020
மஜக வேலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..! மஜக பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..!!
. வேலூர்.அக்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது மற்றும் அவைத் தலைவர் நாஸர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாய் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் மஜக சார்பில் டிசம்பர் 31 வரை, தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்துவது குறித்தும் புதிய கிளைகள் கட்டமைப்பு, அலுவலகம் திறப்பு, கொடியேற்றும் நிகழ்வுகள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சன்னி போஸ்(எ) தேவ இன முதல்வன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார், அவர்களின் இல்லத்திற்கு மாநிலப்பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மற்றும் வேலூர் நகர செயலாளர் பயாஸ் அவர்களின் தாயார் சில நாட்களுக்கு முன் மறைந்தார், கஸ்பா பகுதியைச் சேர்ந்த ஹைதர் அவர்களின் தகப்பனாரும் மரணமடைந்தார். இவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். இதில் மாவட்ட நிர்வாகிகள், வேலூர் நகர நிர்வாகிகள், குடியாத்தம் நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 28.10.2020