கோவை:ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 ஆவது நாள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிறைவு பெறுவதை முன்னிட்டு கோவையில் பல இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டது. அதனடிப்படையில் கோவை கிழக்கு பகுதிக்குட்பட்ட கரும்புக்கடையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் அபு, கிழக்கு பகுதி ஹக்கீம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளானோர் பங்கேற்று மஜக வின் மக்கள் நலப்பணிகளை தாங்கள் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் தங்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்ற வேண்டும் எனக்கூறி ஆர்வத்துடன் தங்களை மஜக வில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம், செய்யது, மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 01.01.2021
உறுப்பினர் சேர்க்கை
பொதக்குடியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.01, மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் பெரியப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. இம்முகாமை தலைமை செயற்குழு உறுப்பினர் SMH ஜெய்னுதீன் துவக்கி வைத்தார். பெரியப்பள்ளி முத்தவல்லி P.M.ஷாஜஹான் உள்பட பலர் தங்களை மஜகவின் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் நத்தர் கனி, பொதக்குடி நகர செயலாளர் முனவர் ஹஸன், பொருளாளர் ஜலாலுதீன், துணைச் செயலாளர் ராசித் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
மதுக்கூரில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.01, தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று நூர் பள்ளிவாசல் அருகில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட செயலாளர் அதிரை சேக் துவக்கி வைத்திட பலர் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக ஆர்வமுடன் பதிவு செய்து கொண்டனர். இதில் மதுக்கூர் நகர நிர்வாகிகள் ரிபாயூதீன், பைசல் அஹமது, சாகுல் ஹமீது, சதாம் உசேன் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
கோவை செல்வபுரத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்! மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர் தொடங்கி வைத்தார்!
கோவை:ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 ஆவது நாள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிறைவு பெறுவதை முன்னிட்டு கோவையில் பல இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டது. அதனடிப்படையில் கோவை செல்வபுரம் மத்திய பகுதிக்குட்பட்ட 77,78, வது வார்டுகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் கிளை பொருளாளர் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம், அக்கீம், சேட், பூ. காஜா, கமால் பாஷா, மத்திய பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் இப்ராஹிம், 78வது வார்டு செயலாளர் ஜாகிர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளர் A.அப்துல் பஷீர், அவர்கள் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். இதில் திரளானோர் பங்கேற்று ஆர்வத்துடன் தங்களை மஜக வில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை செயலாளர்கள் பீர் முகம்மது, நெளபல், தொழிற்சங்க செயலாளர் யூசுப், மற்றும் சித்திக், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 01.01.2021
ஆயங்குடியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி!!
டிச.31, கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் எழுச்சியோடு நடைப்பெற்றது. முன்னதாக அப்பகுதியில் கட்சியின் கொடியினை மாவட்ட செயலாளர் O.R. ஜாகீர் ஹூசைன் ஏற்றி வைத்தார். இம்முகாமில் திரளானோர் பங்கேற்று தங்களை மஜக வின் புதிய உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். இதில் மாவட்ட பொருளாளரும், ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவருமான பஜில் முஹம்மது, கத்தார் மண்டல செயலாளர் யாசின், நகர செயலாளர் புருஹானுதீன், துணை செயலாளர் அன்வர், குவைத் மண்டல நிர்வாகி யாசின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.