ஈரோடு:ஜுலை 17., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து மஜக ஈரோடு மேற்கு மாவட்டம் சத்திய மங்கலத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் B.செரீப், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் நகராட்சி ஆய்வாளர் வேல் முருகன், அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கபசுரக் குடிநீர் சேவை பொது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றது சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் இறுதியில் சத்தியமங்கலம் நகர செயலாளர் R. சலிம், நன்றியுரையாற்றினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 17.07.2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
கலவரங்களை தூண்டுவோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
சமீப நாட்களாக தமிழகத்தில் அமைதியை குலைத்து வன்முறைகளை உருவாக்க சிலர் முயற்சித்து வருவது கவலையளிக்கிறது. உலகில் 200 கோடி மக்கள் மிகவும் மதிக்கும் இறைத்தூதர் எனப் போற்றப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்து வர்மா என்பவர் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அது போல் இந்து சமுதாய மக்கள் கொண்டாடும் முருகன் கடவுளையும், கந்தசஷ்டி கவசத்தையும் விமர்சித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் செய்தி வெளியிட்டிருப்பதும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இதனிடையே நேற்று கோவையில் தமிழர்கள் மிகவும் மதிக்கும் தந்தை பெரியாரின் சிலையை சிலர் காவிச் சாயம் பூசி அவமதித்திருப்பதும் கண்டனங்களை உருவாக்கியிருக்கிறது. ஒரு தரப்பின் நம்பிக்கைகளை, மதீப்பீடுகளை அவமதிப்பது பெரும் குற்றமாகும். இதனால் பரஸ்பர உறவுகளும், பொது அமைதியும் கெடுகிறது. எனவே இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இது போன்ற குற்றங்களுக்கு ஆதரவாக வலைதளங்களில் கருத்து பதிவிடுவோர் மீதும் பாரபட்சமின்றி தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு இதில் உறுதி காட்ட வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 17.07.2020
கூட்டமைப்பு சார்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு..!
ஜூலை.17., தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவரும், கார்டூனிஸ்ட் வர்மா, கல்யான ராமன், மவுண்ட் கோபால், கிஷோர் கே சாமி, மாரிதாஸ் உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக்கோரி கூட்டமைப்பு சார்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் IPS அவர்களை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது. இச்சந்திப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக செங்கை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் தாம்பரம் ஜாகீர் உசேன், தில்சாத் ஆகியோர் குறிப்பிட்ட நபர்களின் முகநூல் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் கூட்டமைப்பை சேர்ந்த கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கல்பட்டு_வடக்கு_மாவட்டம் 16-07-2020
கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளருடன் மஜகவினர் சந்திப்பு..!
ஜூலை.17., கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ் தலைமையில் மஜகவினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். அச்சமயம் கார்டூனிஸ்ட் வர்மாவால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கார்ட்டூனை மறு பதிவாக வெளியிட்ட கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் மனுவும் அளிக்கப்பட்டது. காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் புகார் மனுவை பெற்றுக்கொண்டு உடனே தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகரச் செயலாளர் அமீர்கான் மற்றும் மாநகர பொருளாளர் ஐயப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம். 16-07-2020
கோவை மாவட்ட மஜக தலைமையகத்திற்கு தப்லீக் ஜமாத் தலைவர்கள் வருகை!!மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்களுடன் சந்திப்பு.!
கோவை:ஜூலை.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு தப்லீக் ஜமாத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்து மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் கொரோனா தொடங்கிய காலம் முதல் டெல்லியிலிருந்து தப்லீக் ஜமாத்தினரை தமிழகம் வரவழைத்தது, தற்போது வெளிநாட்டு தப்லீக் சகோதரர்களை சென்னை புழலில் இருந்து மாற்றி ஹஜ் இல்லத்தில் தங்க வைத்தது உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்தும் அதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA., அவர்களின் முன்னெடுப்பு முயற்சிகள் குறித்தும் தப்லீக்கினர் நினைவு கூர்ந்தனர். மேலும் கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தப்லீக் ஜாமாத்தினருக்கு உதவிய மஜகவினருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர். தப்லீக் ஜமாத்தினரிடம் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் கூறும்போது, தப்லீனரின் விவகாரத்தில் ஆரம்பம் முதல் மஜக பொதுச்செயலாளரின் முன் முயற்சிகள் குறித்தும், கோவை மாவட்ட மஜகவினரின் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வரக்கூடிய காலங்களில் கோவையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பாக செயல்பட வேண்டும் எனவும் அவர்களிடத்தில் கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கையை அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின் போது IKP மாநில செயலாளர் லேனா இஷாக்,