வேலூர்.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மாவட்டம் சார்பாக 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வுகளுக்கு மாவட்டச் செயலாளர் முஹம்மத் யாஸீன் அவர்கள் தலைமை தாங்கினார். இளைஞர் அணி துணைச் செயலாளர் சாதிக் அவர்கள் முன்னிலை வகித்தார். காலை 7.30 மணியளவில் R.N.பாளையம் 53-வது வார்டு கிளையின் சார்பாக பொறியாளர் சாதிக் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார், பின்பு மஜக வாழ்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் காலை 8.30 மணியளவில் 31-வது வார்டு மாநகரம் சார்பாக சைதாப்பேட்டையில் தேசிய கொடியை மஜக மாவட்டச் செயலாளர் முகமது யாசின் அவர்கள் ஏற்றி வைத்தார் பின்பு மாவட்ட துணைச் செயலாளர் சையது உசேன் மஜக வாழ்த்து முழக்கங்கள், கூறினார். மேலும் காலை 09.30 மணியளவில் 56-வது வார்டு கொணவட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஜாகீர் உசேன் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து முழக்கங்களையும் எழுப்பினர். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மாவட்ட இளைஞரணி செயலாளர் அமீன், மருத்துவ சேவை அணி துணைச் செயலாளர் அன்சர் பாஷா, மாநகர துணைச் செயலாளர்
இஸ்லாமிய கலாச்சார பேரவை
74வது சுதந்திரதினம்.! மஜக கோவை மாநகர் மாவட்டம் சார்பில் தேசிய கொடியேற்று விழா!!
கோவை:ஆக.15., 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் இரு இடங்களில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ், அவர்களும், உக்கடம் சாலையில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ் அவர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உறுதிமொழி ஏற்று பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR. பதுருதீன், ABT.பாருக், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உசைன்,தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் சமது, இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம் உசேன், சையத் இப்ராஹிம், மாணவர் இந்தியா திருப்பூர் மாவட்ட செயலாளர் நவ்ஃபல், மற்றும் சுவனம் அபு, அர்னால்ட் அக்கீம், ஜாகீர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவைமாநகர்மாவட்டம் 15.08.2020
74வது சுதந்திர தினம்.! மஜக செங்கை வடக்கு மாவட்டம் சார்பில் தேசிய கொடியேற்று விழா.!!
செங்கை:ஆக.15., 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கை வடக்கு மாவட்டம் அனகை நகரத்தின் சார்பாா்காவும் பல்லாவரம் நகரத்தின் சாா்பாகவும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் நகர நிா்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் ஜிந்தா மதாா் அவர்கள் அனகை நகரத்தில் தேசியகொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கி சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். பல்லாவரம் நகரத்திலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசரக் குடிநீா் மற்றும் முககவசங்களை வழங்கினாா்கள். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மாவட்ட துணைச் செயலாளா்கள் தாம்பரம் ஜாகீா் உசேன், தில்ஷாத், ஆலந்தூா் சலீம், மாவட்ட அணி நிா்வாகிகள் த.அப்துல்லா, எச்.அப்துல் சமது, பைசுல்லா மேலும் இஸ்மாயில், பம்மல் நகரச் செயலாளா் மஃக்பூல், அனகை நகரச் செயலாளா் சலீம், பல்லாவர நகர நிா்வாகி அஜீஸ் முஸ்தாக் ஆகியோா் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கை_வடக்கு_மாவடடம் 15-08-2020
74வது சுதந்திர தினம்! மஜக வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி..!
வேலூர்.ஆகஸ்ட்-15., நாட்டின் 74-வது சுதந்திர தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா நகரம் சார்பாக தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளிகொண்டா நகரச் செயலாளர் N.அஜீஜூர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி வாழ் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர், இதில் பள்ளிகொண்ட நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் D.ரங்கநாதன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரப் பொருளாளர் சத்தார் மற்றும் ரஹிம், இர்பான் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 15-08-2020
74வது சுதந்திர தினம்! மஜக திருப்பூண்டி கிளை சார்பாக தேசிய கொடியேற்றி கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.!
நாகை.ஆகஸ்ட்-15., 74-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்டம் திருப்பூண்டி கிளை அலுவலகம் மற்றும் மலாக்கா பள்ளி தெரு ஆகிய இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. பிறகு பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_தெற்கு_மாவட்டம் 15-08-2020