கடந்த செப்.26 அன்று மஜக இளைஞர் அணி சார்பில் "இந்திய அரசியலும், இளைஞர்களின் கடமையும்" என்ற தலைப்பில் காணொளி வழி கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... இளைஞர் அணி சார்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பங்கு பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இளைய சமூகத்தை சரியான இலக்கை நோக்கி அழைத்து செல்வது நமது நோக்கமாகும். அது காலத்தின் தேவையுமாகும். நமது பணிகள் அனைவருக்குமானவை. நாம் பரந்துபட்ட இந்திய சமூகத்தின் நலன்களுக்காக குரல் கொடுக்கின்றோம். இந்த நாட்டில் குரலற்ற மக்களின், குரலை நாம் எதிரொலிக்கிறோம். போராட்டங்களை தீர்வுகளுக்காக நடத்துகிறோம். அதில் வெற்றியும் உண்டு. தோல்வியும் உண்டு. எந்த ஒரு போராட்டமும், முயற்சியும் உடனடியாக தீர்வுக்கு வராது என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறோம். சில விஷயங்களுக்கு நீண்ட உழைப்பு தேவை. விதை விதைத்து, ஒரே நாளில் எந்த விவசாயியும் பலன் பெறுவதில்லை. அதுபோலத்தான் நாம் நீண்ட தயாரிப்போடு, நெடிய ஜனநாயக போராட்டத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் . இளைஞர்களே... உங்களுடைய சிந்தனைகளை பலப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய சிந்தனைகளை ஜனநாயக படுத்திக் கொள்ளுங்கள், உங்களுடைய சிந்தனைகளை முற்போக்காக வளர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இப்போது நாட்டுக்கு இத்தகைய அணுகுமுறைகள்தான்
அறிக்கைகள்
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, மஜக பொதுசெயலாளர் திரு. மு தமிமுன் அன்சாரி பேட்டி – தினமணி நாளிதழ், New Indian Express
இது அநீதியான தீர்ப்பு! சிறுபான்மையினரின் உள்ளங்கள் எரிகிறது! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
இந்தியாவின் தொன்மை வாய்ந்த அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்த பாபர் மஸ்ஜித், 1992, டிசம்பர் 6 அன்று பயங்கவாத சக்திகளால் இடிக்கப்பட்டது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் சங்பரிவார் தலைவர்கள் இந்த அராஜக நிகழ்வுக்கு தலைமையேற்றனர். அவர்களின் திட்டமிடல், ஊக்குவிப்பு காரணமாக அந்த பாதகம் அரங்கேற்றப்பட்டது. சமீபத்தில் அயோத்தி நிலம் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் , பாபர் மஸ்ஜித் இடிப்பை குற்றம் என கூறியது. இது குறித்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள நிலையில்,தற்போது லக்னோ சிபிஐ நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேர்களையும் விடுதலை செய்துள்ளது. இது அதிர்ச்சியை தருகிறது. வேதனையளிக்கிறது. இந்த தீர்ப்பு அநீதியானது.சட்ட விரோதமானது. தீர்ப்பு வேறு, நீதி வேறு என்ற நிலை நம் நாட்டில் உருவாகி இருக்கிறது. இதை மனசாட்சி உள்ள யாராலும் ஏற்க முடியாது. பாபர் மஸ்ஜிதை இடிப்போம் என சபதமிட்டு அவர்கள் ரத யாத்திரையை நடத்தினார்கள். அதனால் வழியெங்கும் மதக்கலவரங்கள் ஏற்பட்டு பல நூறு அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 1996 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாக்கி, பத்திரிக்கையாளர்களையும்
திராவிடத்தையும் தமிழர் மரபையும் மறைக்கும் முயற்சியா? மத்திய அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!
12ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தியக் கலாச்சாரத்தின் பின்னணி குறித்து ஆராய்வதற்காக இந்திய அரசு அமைத்துள்ள அறிஞர் குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த எவரும் இடம்பெறவில்லை. தமிழகத்தை வழக்கம் போல இதிலும் புறக்கணித்திருக்கிறார்கள் என்ற கோபம் பரவலாகி வருகிறது. இந்தியாவின் மிகத் தொன்மைவாய்ந்த மொழி தமிழ் என்பதும், தமிழரின் பண்பாடும், நாகரிகமும் மிகத் தொன்மை வாய்ந்தவை என்பதும் நிரூபிக்கப்பட்டவை. இதை சிந்துவெளி அகழாய்வு முதல் கீழடி அகழாய்வு வரை எடுத்துக்காட்டியுள்ளன. திராவிட மொழிகள் அனைத்தும் மிக பழமை வாய்ந்த வரலாற்று மொழிகள் ஆகும். அது போல் வடகிழக்கு மாநிலங்களின் வரலாறும் தொன்மையானவை. வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த உண்மைகளைப் புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு அமைத்த இந்தக் குழு பன்மைத் தன்மைகள் அற்றதாக உள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். வரலாற்று திரிப்பை ஏற்படுத்தும் நோக்குடன் குறிப்பிட்ட உயர் சாதியினரை முன்னிலைப்படுத்தி இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குதிரையை குதிரை என்றும், கடலை கடல் என்றும், மலையை மலை என்றும் சொல்வதே அறிவுடைமையாகும். இதை மாற்றி சித்தரிக்கும் முயற்சியில் யார் ஈடுபட முயன்றாலும் அது மன்னிக்க முடியாத பெருங்குற்றமாகும். இது போன்ற வரலாற்று ஆபத்துகள் ஏற்படக் கூடாது என்பதே எல்லோரின் கவலையாகும். எனவே இத்துறையில் வல்லமை
கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகள் கைக்கட்டி நிற்பதா? மத்திய அரசின் மசோதாக்களுக்கு கண்டனம்! மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
மத்தியில் ஆளும் பாஜக அரசு, விவசாயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மூன்று மசோதாக்களும் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இவை சாதாரண விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் நவீன வலையில் சிக்க வைக்கிறது. விவசாயிகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அவர்களுடைய நலன்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இதில் பல அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்பு நமது விவசாயிகள் கைகட்டி நிற்கும் நிலையை இம்மசோதாக்கள் ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து மாநில அரசுகளிடமும், விவசாய பிரதிநிதிகளிடமும் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு அவசரப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இம்மசோதாக்களை அதிமுக ஆதரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகள் சுட்டி காட்டும் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே இம்மசோதாக்களை மாநிலங்கள் அவையில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இல்லையேல் நாடு தழுவிய அளவில் விவசாயிகளின் பெரும் போராட்டத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எச்சரிக்கின்றோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 19.09.2020