ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிப்புக்குள்ளாகி ஏராளமான உயிர்கள் பலியானதை தொடர்ந்து நேற்று கோவையில் பேட்டியளித்த தமிழக முதல்வர் அவர்கள், ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார். கடந்த 2019, ஜூலையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதன் முதலில் இக்கோரிக்கையை மஜக சார்பில் நான் தான் எழுப்பினேன். அதன் பிறகு பாதிப்புகள் தொடர்ந்ததால்,பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தினர். இந்நிலையில் தமிழக முதல்வர் இதற்கு தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் துரிதமாக முடிவெடுப்பது பல உயிர்களை காப்பாற்றும் என்பதால் தமிழக அரசு தாமதிக்காமல் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 6.11.2020
அறிக்கைகள்
கொரோனா பிணங்களை எரிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்! மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரிக்க வேண்டும் என இலங்கை அரசு அறிவித்து அதன்படி முயற்சிகளை செய்து வருகிறது. உலகம் எங்கும் இத்தகைய பிணங்களை 10 அடிக்கும் ஆழமான குழிகளில் புதைக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியுள்ளது. இந்நிலையில் இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் கொண்ட முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர மக்களின் கலாச்சாரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் இலங்கை இனவாத அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பிணங்களை எரிப்பது அங்கே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. வேண்டுமென்றே சர்வதேச விதிகளுக்கு புறம்பாக இலங்கை இனவாத அரசு இத்தகைய நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக, மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது நோய் தொற்றை அதிகரிக்க செய்யும் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. கொரோனா நெருக்கடியிலும் தங்களின் இனவாத அராஜகங்களை, இலங்கை அரசு முன்னெடுப்பதாக அங்கே மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இலங்கை அரசு அங்கு வாழும் அனைத்து சமூகத்தின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்குமாறும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க வேண்டும் என விரும்பும் முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர மக்களின் உணர்வுகளுக்கும், கோரிக்கைகளுக்கும் மதிப்பளிக்குமாறும் மனிதநேய ஜனநாயக
வெளிநாடுகளிலிருந்து காளைகளை இறக்குமதி செய்வதை தமிழகஅரசு நிறுத்த வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
தமிழகத்தில் பால்உற்பத்தியை பெருக்கும் திட்டத்துடன், மாடுகளிடையே இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட கலப்பின காளைகள் மற்றும் பசுக்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய பால்வள அபிவிருத்தி வாரியத்தின் அனுமதியுடன், தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை இறக்குமதி செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து 105 ஜெர்சி ரக காளைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த வகையான கால்நடைகள் ஐரோப்பிய மரபணுக்களுக்கும், பருவ காலத்திற்கும் ஏற்றவை. இறைச்சிக்காகவும், அதிக பால் உற்பத்திக்காகவும் மரபணு மாற்றங்களுடன் செயற்கை வழியில் உருவாக்கப்படுபவை. இந்த ரக மாடுகள் வெப்ப மண்டல பகுதிகளுக்கு ஏற்றவை அல்ல. இவை தமிழக மக்களின் உடல் நலத்திற்கும், தமிழகத்தின் தட்பவெப்ப நிலைகளுக்கும் பொருத்தமற்றவையாகும். குளிர்பிரதேசங்களை சேர்ந்த அந்த மாடுகளிடம், திமில் மற்றும் வியர்வை நாளங்கள் இல்லாததால், அதன் வெப்பம் பால் மற்றும் சிறுநீர் வழியாகவே வெளியேறும் என்றும்,அவற்றின் சாணமும், சிறுநீரும் நம் விவசாய நிலத்திற்கு பயனற்றவை என்றும் கூறப்படுகிறது. அதிகமான பால் உற்பத்தி என்ற பெயரில், தொழிற்சாலையில் உற்பத்தி செய்வது போன்ற இந்த ரக மாடுகளை, நமது ரக மாடுகளுடன் கலப்பினம் செய்வதால் ஏற்படும்
பேரறிவாளனை உடனே விடுதலை செய்ய வேண்டும்! வேதாரண்யத்தில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!
நவ 4 இன்று வேதாரண்யத்தில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் மன்சூர் அவர்களின் M - Look ரெடிமேட் ஆடையக கடையை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வணிகர் சங்க மாநில துணைத் தலைவர் SS. தென்னரசு, பேரமைப்பின் மாவட்ட தலைவர் வேதநாயகம், மஜக மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது... பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையின் தீர்மானம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காத்து வந்தார். பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையை எதிர்பார்த்து இருப்பதாக காரணம் கூறப்பட்டது. நேற்று உச்ச நீதிமன்றம் இது பற்றி கூறுகையில், அந்த அறிக்கை தேவையில்லை என்றும், இன்னும் ஏன் இவர்களின் விடுதலை குறித்து கவர்னர் முடிவெடுக்கவில்லை ? என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் கருத்தின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக
சமூக நல்லிணக்கத்தை வளர்தெடுப்பதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்! குத்தாலம் ஜமாத் வரவேற்பு நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!
நவ.03, குத்தாலத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA விற்கு முஹையதின் ஆண்டவர் பள்ளியில் ஜமாத்தார்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அவர் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு ... https://www.facebook.com/700424783390633/posts/2920734784692944/ குத்தாலம் ஜமாத்தின் சார்பில் நடைப்பெறும் இந்த இனிய வரவேற்பு நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. இங்கு கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் எல்லாரும் எழுந்து மவுனம் கடைப்பிடித்து அவர்களுக்காக பிராத்தித்தது நெகிழ்த்தக்கதாக இருந்தது. இது தான் மனிதநேயம். கொரோனா ஆபத்து நீடிக்கிறது என்பதற்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் சமீப மரணம் ஒரு சாட்சியாக உள்ளது. எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இங்கு பள்ளிக்குள் நுழையும் போதே, எல்லாரும் கைகளிலும் கிருமி நாசினி தெளித்தீர்கள். சமூக இடைவெளியுடன் தொழுகையை நடத்துகிறீர்கள். அனைத்தையும் நான் கவனித்தேன். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஜமாத்தை பாராட்டுகிறேன். இது பொறுப்புணர்வின் வெளிப்பாடு. குத்தாலம் மற்றும் இச்சுற்று வட்டார பகுதிகள், எல்லா சமூக மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய வட்டாரமாக இருக்கிறது. இங்கு எல்லா சமூக மக்களும் அண்ணன், தம்பிகளாக வாழ்கிறீர்கள். இந்த ஒற்றுமையை, இணக்கத்தை வளர்த்தெடுக்க இனி வரும் காலங்களில் இன்னும் கூடுதல் அக்கறை காட்ட