தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள், ஆய்வு பணிக்காக கோவை மத்திய சிறைக்கு வருகை தந்துள்ளார். அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. முக.ஸ்டாலின், அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அண்ணா பிறந்த நாளையொட்டி 700 சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்ததை வரவேற்கிறோம், அது போல் 10, ஆண்டுகளைக் கடந்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை ஜாதி மத பேதமில்லாமல் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம், மேலும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம், அதுபோன்றே 14 ஆண்டுகள் சிறையில் கழித்த அனைத்து சிறைவாசிகளையும் ஜாதி, மத, பேதமில்லாமல் வழக்கில் பாகுபாடு காட்டாமல் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விரிவான பட்டியலை அமைச்சர்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
கோவையில் கொரோனா பெருந்தொற்றில் மக்கள் சேவையாற்றி விருதுபெற்ற மஜக! PFI அமைப்பு வழங்கியது!
கோவையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கொரோனா காலத்தில் சேவையாற்றியவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மனிதநேய ஜனநாயக கட்சிக்கு கொரோனா வாரியர்ஸ் விருதை PFI தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில், அவர்கள் வழங்கினார். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், தலைமையிலான நிர்வாகிகள் விருதை பெற்றுக்கொண்டனர். இதில் வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர் நெளபல் பாபு, இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் பைசல், Mjts மாவட்ட பொருளாளர் ரியாசுதீன், மாவட்ட துணை செயலாளர் பயாஸ், மற்றும் நிர்வாகிகள் ஆரிப், காஜா மொய்தீன், சிராஜ்தீன், உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து MJTS தொழிற்சங்கத்தினர், மஜக வின் பல்வேறு பகுதி, கிளை, நிர்வாகிகள் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 17.10.2021
தேசிய தன்னார்வலர்கள் தினம்..! பெரம்பலூர் மாவட்ட மஜகவிற்கு அமைச்சர் விருது…!!
தேசிய தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு குன்னம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமைச்சர். எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களால் சிறந்த தன்னாரவளர் என்று கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மஜக மாவட்ட பொருளாளர் மாயவேல், மாவட்டத் துணை செயலாளர்கள் அப்துல் ரஹ்மான், ஜஹாங்கீர் பாஷா, தமீம் அன்சாரி, வழக்கறிஞர் அணி செயலாளர் இஸ்மாயில், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசப் ராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_பெரம்பலூர்_மாவட்டம் 16.10.21
பொதுப்பணித்துறை திட்டங்களுக்கு முன்னோடி மருதநாயகம்! நூல் வெளியீட்டு விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!
விடுதலைப் போராட்ட தலைவர் கான் சாஹிப்@ மருதநாயகம் குறித்து முதன் முதலில் கவிக்கோ. அப்துல் ரஹ்மானின் தந்தை மஹதி அவர்கள் 1961 ஆம் ஆண்டு மாவீரன் கான் சாஹிப் என்ற நூலை எழுதினார். நீண்ட காலத்திற்கு பிறகு அதன் இரண்டாம் பதிப்பின் அறிமுக நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைப்பெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி சார்பில் தஞ்சாவூர் - விளார் - கிரின்சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூலாய்வு மற்றும் அறிமுக நிகழ்வில், நகரின் அரசியலாளர்கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள் , பணி ஒய்வுப் பெற்ற காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... மருதநாயகத்தின் வரலாறை முதன் முதலில் தமிழில் கொண்டு வந்த இந்நூலை,அவர் தூக்கிலிடப்பட்ட தேதியில், மறு அறிமுகம் செய்து இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம். சினிமாக்காரர்களுக்கு கூட்டம் போட்டு அவர்களை கொண்டாடும் நாட்டில், விடுதலை போராளிகளின் தியாகத்தை நினைவு கூறும் இந்நிகழ்வில், அதுவும் 5 மணி நேர ஏற்பாட்டில் , இவ்வளவு பேர் கூடியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நடிகர் கமல்ஹாசன் 1999ல் இவரைப்
அருப்புக்கோட்டையில் மஜக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்..!
மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை & இஸ்லாமிய கலாச்சார பேரவை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் அருப்புக்கோட்டை அல் அமீன் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை நல்லூர் முஸ்லீம் ஜமாத் உறவின்முறை ஜமாத் தலைவர்.ஹாஜி. M. ஜஹாங்கிர் துவைக்கி வைத்தார்கள். இம்முகாம் திரு. A. சம்சுதின், அவர்கள் ஜமாத் நிர்வாகி, அல் அமீன் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி தலைவர். திரு. L. மொய்தீன் அப்துல் காதர் ஜெய்லானி, அவர்கள் தாளாளர் அல்-அமீன் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி திரு.N. சேக் உதுமான், அவர்கள் நல்லூர் முஸ்லீம் ஜமாத் உறவின்முறை செயலாளர் தலைமை தாங்கி நடத்தி வைத்தவர், திரு. கண்மணி காதர். அவர்கள் விருதுநகர் மாவட்ட செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. சிறப்பு அழைப்பாளர்கள். மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய. உயர்திரு. S. சிவப்பிரகாசம் அவர்கள். நகரத் தந்தை அருப்புக்கோட்டை திமுக. Ex. சேர்மன் மற்றும் உயர்திரு. T. பாலமுருகன் நகர காவல்நிலைய ஆய்வாளர் அருப்புக்கோட்டை, மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்ட