ஏப்.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துக்குடா நகர கிளை இன்று உதயமானது. இதில் மாவட்ட செயலாளர் துறை முகம்மது தலைமையில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணை செயளாலர்கள் முகம்மது ஜான், முகம்மது ஹாரிஸ், லெட்சுமணன் ஆகியோர் மற்றும் மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
செய்திகள்
கொங்கு புரட்சி பேரவை மஜகவுக்கு ஆதரவு
கொங்கு புரட்சி பேரவையின் நிறுவன தலைவர் வேலு சண்முக ஆனந்தம் தனது நிர்வாகிகளுடன் மஜக தலைமையத்திற்கு வருகை புரிந்து பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியை சந்தித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்கான தனது ஆதரவை நல்கினார் . தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் சிறுபான்மை மக்களும் , கொங்கு சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு இரு அமைப்புகளும் பாடுபட வேண்டும் என்று உறுதியேற்று கொண்டது . இவண் -மஜக ஊடகப்பிரிவு
ரியாத் (பத்தாஹ்வில்) மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இன்று 8/04/206 வெள்ளிக்கிழமை காலை 10-மணியளவில் ரியாத் [பத்தாஹ்வில்] மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் 3 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் 1:மனிதநேய கலாச்சார பேரவை விரைவில் ரியாத்தில் கிளைகள்ளை அதிகம் அமைப்பது.. 2:அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் உறுப்பினர் அட்டை வழங்குதல். 3:வேட்பாளர்கள்லாக அறிவித்துள்ள பொதுச் செயலாளர் தமிமூன் அன்சாரி அவர்கள்ளும் ஹாரூன் ரசீது அவர்கள்ளும் வாழ்த்துக்கள்ளை தெரிவித்துக் கொள்கிறோம் அவர்கள் வெற்றி பெற அனைத்து உதவியும் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது... மேலும் ரியாத் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் அவர்கள் அனைத்து நிர்வாகிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி அட்டை வழங்கினார். இன்று நடைபெற்ற நிர்வாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவன் மனிதநேய கலாச்சார பேரவை ஊடகப்பிரிவு ரியாத்
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோடைக்கான தண்ணீர் பந்தல் திறப்பு…
ஏப்.02., கும்பகோணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி இளம் புயல் ஆட்டோ தோழர்கள் சங்கத்தின் சார்பில் குடந்தை மஜக நகர செயலாளர் நிஜாம் மைதீன் அவர்கள் தலைமையில் கோடைக்கான தண்ணீர் பத்தல் திரக்கப்பட்டது. இதில் தஞ்சை வடக்கு மாவட்ட துணைசெயலாளர் முகமது யாசின், ஒன்றிய பொருப்பாளர் இப்ராஹிம்ஷா, குடந்தை நகர துணை செயலாளர் தஜீமல் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். இக்கூட்டத்தில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் மஜக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சிக்கு தான் அனைவரும் ஓட்டு போடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... எல்லாப் புகழும் இறைவனுகே...!!! -தகவல் : மஜக ஊடகப்பிரிவு குடந்தை நகரம்.
மஜக-அஇஅதிமுக தேர்தல் கூட்டணிபற்றிய பேச்சுவார்த்தை இன்று நலமுடன் முடிந்தது…
ஏப்.02., போயஸ்தோட்டத்தில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாளர் M.தமிமுன் அன்சாரி மற்றும் பொருளாளர் S.S.ஹாரூன் ரஷித் மற்றும் கட்சி தலைமை நிர்வாகிகளுடன் அஇஅதிமுக பொதுச்செயளாளரும் தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை சந்தித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கான தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது சுமுகமான தேர்தல் கூட்டணிபற்றிய பேச்சுவார்த்தை நலமுடன் முடிந்தது எனவும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு அஇஅதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தல்களில் 200 க்கும் மேற்ப்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கூறினார். -தகவல் மஜக தலைமை ஊடகப்பிரிவு