ஏப்.17., நேற்று மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தால் நாகூரின் கடை விதிகள் குலுங்கின. பெரும் திரளான தொண்டர்களோடு அதிமுக கூட்டணியின் மஜக வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி நாகூர் கடை வீதிகளில் களமிறங்கினார்.வழியெங்கும் உற்சாக வரவேற்பு கிடைக்க,மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே வாக்கு சேகரித்தார். ஒவ்வொருவரும் அவரை கட்டிப் பிடித்து கைக் குலுக்கினர்.இளைஞர்கள் போட்டிப் போட்டு 'செல்ஃபி'எடுத்தனர்.நீங்க சிறப்பாக ஜெயிப்பிங்க என்றும் நல்ல தலைவரா சமுதாயத்தை வழி நடத்துங்க....என்றும் 'எங்க ஓட்டு உங்களுக்குத்தான் 'என்றும் மக்கள் வாழ்த்தி வரவேற்றனர். அவருடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் ஓடிவந்து நலம் விசாரித்தனர்.இனிப்பு கடைகளுக்கு சென்றபோது கடைக்காரர்கள் குலாப்ஜாமூன் ,பால்கோவா போன்றவற்றை ஊட்டி விட்டு அன்பை வெளிப்படுத்தினர். கடைகளில் நின்றிருந்த வாடிக்கையாளர்களோடு அவர் கைக்குலுக்கி வாக்கு சேகரித்தார். கடை முதலாளிகள் சால்வை அணிவித்து'நீங்க சிறந்த வேட்பாளர்'என வாழ்த்தினர். நாகூர் தர்ஹா வாசலில் வாக்கு சேகரித்தப் போது,பல மாவட்டங்களை சேர்ந்த யாத்ரீகர்கள் ஓடிவந்து தங்களை வேட்பாளர் தமிமுன் அன்சாரியுடன் அறிமுகப்படுத்தி படம் எடுத்துக் கொண்டனர். நாகூர் இன்றைய பிரச்சாரம் ஒரு நட்சத்திர நிகழ்வாக அமைந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. தகவல்: மஜக ஊடகப் பிரிவு
செய்திகள்
மஜக மாநில துனை பொதுச் செயலாளர் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட ஜமாத்தார்களுடன் மரியாதை நிமித்த சந்திப்பு…
ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட மானூர் மேல்கரைபட்டி பெரிச்சபாலையம் கீரணூர் தொப்பம்பட்டி ஒன்றியம் பகுதிகளில் ஜமாத்தார்களை மஜக மாநில துனை பொதுச் செயலாளர் முகம்மது மைதீன் உலவி அவர்கள் மரியாதை நிமித்மாக சந்தித்தார்கள் திண்டுக்கல் மேற்கு,கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : மஜக ஊடகப் பிரிவு
காயல் நகர மஜக நிர்வாகிகளுடன் சமக நிர்வாகிகள் சந்திப்பு
ஏப்.15., இன்று காயல்பட்டினம் வருகை தந்த சமக பொது செயலாளர் ஜெய பிரகாஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சுந்தர் அவர்களையும் நகர மஜக நிர்வாகிகள் மாவட்ட து.செயலாளர் A.R.சாகுல் ஹமிது தலைமையில் சந்திப்பு ஏற்பட்டது வரும் 17ம்தேதி காயல் நகருக்கு வருகை தரும் திருமதி ராதிகா சரத்குமார் அவர்கள் தேர்தல் பிரச்சார பயணம் குறித்து அலோசனை செய்யப்பட்டது இந்த சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அப்துல் அஜிஸ், து.செயலாளர் K.ராசிக் ,நகர து.செயலாளர்கள் ஜியாவுதீன்,யூசுப், மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் முகம்மது நஜிப், 6வது வார்டு செயலாளர் ஜரித், சதாம் ஆகியோர் கலந்து கொன்டனர் இந்த சந்திப்பில் அதிமுக நகர செயலாளர் A.J.செய்யது இபுராகிம் மற்றும் சமக நகர செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
மஜக ஒட்டன்சத்திரம் வேட்பாளர் அஇஅதிமுக சிறுபாண்மை பிரிவுச் செயளாலரை சந்தித்து ஆதரவு கோரினார்…
மஜகவின் மாநில செயலாளரை சந்தித்த அஇஅதிமுக வேட்பாளர்கள்…
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பாரதி மோகன்_MP அவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் சேட்டு அவர்களும், ஒன்றிய செயலாளர் AVK.அசோக் குமார் அவர்களும், திருபுவனம் நகர செயலாளர் சிங் செல்வராஜ் மற்றும் அ.இ.அ.தி.மு.க சகோதரர்களும் மரியாதை நிமித்தமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ஹெச்.ராசுதீன் அவர்களின் இல்லத்தில் சந்தித்தார்கள்... இவண், மஜக_ஊடகப்_பிரிவு (தஞ்சை வடக்கு)