மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இஃப்தார்.(நோன்பு திறப்பு ) நிகழ்ச்சி நாள்:- 01/07/2016. இடம்:- K.M.K திருமண மண்டபம் வெள்ளிக்கிழமை. சைதாப்பேட்டை மாலை-5மணிக்கு. வேலூர்(கி) மாவட்டம் சிறப்பு அழைப்பாளர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலாளர் ஜனாப்:- M.தமிமுன் அன்சாரி MA.MLA நாகை சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஜனாப்:- S.S.ஹாரூன் ரஷீத்.M.com மனிதநேய ஜனநாயக கட்சி மாநில அவைத்தலைவர் ஜனாப்:- மெளலவி S.S.நாசர் உமரி மற்றும். மாநில ,மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் வருக..! வருக. என வரவேற்க்கின்றோம்..! இவன் #மனிதநேய_ஜனநாயக_கட்சி
செய்திகள்
காரைக்காலில் மஜக சார்பில் இப்தார் நிகழ்ச்சி M.தமிமுன் அன்சாரி MLA செய்தியாளர் சந்திப்பு..
காரைக்காலில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஜக பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான #M.தமிமுன்_அன்சாரி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : "சென்டாக் கலந்தாய்வு மூலம் அனுமதி ஆணை பெற்ற மாணவர்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும்போது, முழு கட்டணத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன. அரசு வழங்கும் நிதியுதவித் தொகை ரூ. 2,25,000-ஐ கழித்துக் கொண்டு, மீதித் தொகையைத்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கேட்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் முழுக் கட்டணத்தையும் கட்டச் சொல்லியுள்ளன.தற்போது நடைபெற்று வரும் மருத்துவக் கலந்தாய்வின் மூலம் இடம் பெறும் மாணவர்கள், ஜூன் 30-ஆம் தேதிக்குள் சேர வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆகையால், ஏற்கெனவே முதல்வர் அறிவித்தபடி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதுயுதவி தொகையை வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதனை அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பி, நிதியுதவித் தொகையை கழித்துக் கொண்டு, மீதமுள்ள தொகையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருகே உள்ள வடமட்டம், புதுத்துறை பாலம்
கூத்தாநல்லூர் இஃப்தார் நிகழ்ச்சியில் ம.ஜ.க பொதுசெயலாளர்!!!
கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசலில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் ம.ஜ.க பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கலந்து கொண்டார். பள்ளிவாசலுக்கு வருகை தந்த அவருக்கு ஜமாத்தார்கள் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு ஜமாத்தார்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூத்தாநல்லூரை தனி தாலுக்காவாக ஆக்க வேண்டும், மின் சிக்கல்கள்களை தீர்க்க நவீன டிரான்ஸ்பர்மர்கள் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கி இருந்தன. இதுகுறித்து அமைச்சர்களிடம் பேசி உடனடி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். பொதுசெயலாளர் வருகையை முன்னிட்டு வழக்கத்தை விட நான்கு மடங்கு மக்கள் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொழுகைக்கு பிறகு உள்ளுர் சேவை அமைப்புகளை சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும், ஏராளமான இளைஞர்களும் தேர்தலில் வெற்றி பெற்றதற்க்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். தகவல் : மஜக ஊடகபிரிவு
கோவை அல் ஹிதாயா பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கு மத்தியில் மஜக பொதுச் செயலாளர் கலந்துரையாடல்!
கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் முகாமிட்ட மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஜமாத்துகள், வணிக அமைப்புகள், சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என பலதரப்பையும் சந்தித்தார் . நேற்று சிங்காநல்லூர், துடியலூர் ஜமாத்துகளையும், மாவட்ட TNTJ நிர்வாகத்தையும் சந்தித்தார் தொடர்ந்து ஜமாத்-இ-இஸ்லாம் சார்பில் கோவையில் நடத்தப்பட்டு வரும் ஹிதாயா பெண்கள் இஸ்லாமிய கல்லூரிக்கு வருகை தந்தார். அவருக்கு வரவேற்பளித்த நிர்வாகிகள் கல்லூரியின் செயல்பாடுகளை விளக்கினார். ஒரு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிக்கு இனையாண தரத்துடன் அக்கல்லூரி செயல்பட்டு வருவதும் பெண்கள் மிகவும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதும் அக்கல்லூரியின் சிறப்புகளாக இருக்கிறது. அங்கு பயின்று வரும் மாணவிகளோடு பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறிது நேரம் கலந்துரையாடினார். பிறகு அக்கல்லூரி வளாகத்தை பார்வையிட்டார். ஒரு பகுதியில் அனைத்து சமூக பெண்களுக்கும் தையல் பயிற்ச்சியும் வழங்கப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக சான்றிதழும் வழங்கப்பட்டு வருவதையும் கல்லூரி நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு
அமீரகம் அஜ்மானில் மனிதநேய கலாச்சார பேரவை துவக்கம்…
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகச் சிறிய பகுதியான #அஜ்மான் அமீரக பகுதி பாரசிக குடாவை ஒட்டி அமைந்துள்ளது. #மனிதநேய_ஜனநாயக_கட்சி யின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக விளங்கும் #மனிதநேய_கலாச்சார_பேரவை அஜ்மான் நகரில் இறைவன் அருளால் துவங்கப்பட்டது. அமீரக து.செயலாளர் #முகமது_அலி_ஜின்னா தலைமையில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் அமீரக செய்தி தொடர்பாளர் #அபுல்_ஹசன், ஷார்ஜா மண்டல செயலாளர் #அடியற்கை_யூசுப்தீன் ஆகியோர் மஜகவின் செயல்பாடுகளை அமீரகத்தில் ஆற்றி வரும் பணிகள் குறித்து விளக்க உரை நிகழ்த்தினர். அதன் பின் ஏகமனதாக அஜ்மான் மண்டல நிர்வாகம் அமைக்கப்பட்டது. அஜ்மான் மண்டல செயலாளராக #குத்தாலம்_முகமது_செல்லப்பா 0562159742 மண்டல பொருளாளராக #குடந்தை_சாகுல்_ஹமீது 0552458005 துணை செயலாளர்களாக: #சேக்_முகைதீன் #வவ்வாலடி_சேக்_அலாவுதீன் #திருத்துறைபூண்டி_அப்துல்_கபூர் மண்டல ஆலோசகராக #கட்டிமேடு_பஷீர்_அஹமது மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் லால்பேட்டை - M.ஜியாவுதீன் தோப்புத்துறை- M.சாகுல் ஹமீது தோப்புத்துறை - H.ரிஜிவான் உசேன் விருதாசலம் - S.முகமது உசேன் அய்யம்பேட்டை - s.முஹம்மது பைசல் கடியேச்சேரி - S.ஜெகபர் சாதிக் புஷ்பாவனம் - S.முஜிபுதீன் ஆகிய செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். #எல்லா_புகழும்_இறைவனுக்குகே.. - மஜக ஊடகப்பிரிவு