மார்ச்:01., மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடி நாள் அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்டம்,ஆக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 7 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி கிளை செயலாளர் M.முஹம்மது சஹின், தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அபுதாபி மண்டல செயலாளர் A.முஹம்மது ரபி அவர்கள் பங்கேற்று கொடியேற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் ஆக்கூர் மு.ஷாஜஹான் அவர்கள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினார். இந்நிகழ்வில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் M.அமீருல் அஸ்லம், கிளை பொருளாளர் T.முஹம்மது அஸாருதீன், கிளை துணை செயலாளர் B.முஹம்மது ஜஸ்பர், மருத்துவ சேவை அணி கிளை செயலாளர் A.R.ஜஸ்வத் அஸ்லம், தகவல் தொழில் நுட்ப அணி கிளை செயலாளர் M.அப்துல் ரஹ்மான்,மாணவர் இந்தியா கிளை செயலாளர் J.முஹம்மது நவ்பல், துணை செயலாளர் J.ரிபாத் ரஹ்மான், விளையாட்டு அணி செயலாளர் முஹம்மது சுஹைல் மற்றும் அணி நிர்வாகிகள், கலந்து கொண்டனர். தகவல், மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING மயிலாடுதுறை மாவட்டம் 28.02.2022
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
திருப்பூண்டியில் மஜக 7ம் ஆண்டு துவக்க விழா கொடியேற்று நிகழ்ச்சி
மார்ச்:01 மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடி நாள் அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது. அவன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் திருப்பூண்டியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ம் ஆண்டு துவக்கவிழா, கொடியேற்று விழா திருப்பூண்டி கிளை செயலாளர் T.ஹாஜா முயுனுதீன், தலைமையில் நடைப்பெற்றது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் J.ஷாகுல் ஹமீது, விவசாய அணி மாவட்ட செயலாளர் V.ஜெக்கரியா, கிளை துணை செயலாளர் S.ஜியாவுதீன், கிளை பொருளாளர் S.முகமது ஜிபையர் ஆகியோர், பங்கேற்று ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில் கிளை பொருப்பாளர்கள் Aஹாருன் சேட், A செய்யது இப்ராஹிம் S .நஜிமுதீன், முகமது அஷரஃப், பாரிஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING நாகை மாவட்டம் 28.02.2022
அந்தியூரில் மஜக 7ஆம் ஆண்டு தொடக்க விழா..!
பிப்ரவரி:28,மனிதநேய ஜனநாயக கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி இன்று தமிழகமெங்கும் மஜக சார்பில் கொடி நாள் என அறிவிக்கப்பட்டு மாவட்ட மெங்கும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் மஜக மாவட்டச் செயலாளர் ஷானவாஸ், அவர்கள் கட்சிக் கொடியை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், அவர்கள் முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்வில் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர். உஸ்மான் அலி, நகர செயலாளர் மைதீன்பேக், நகர பொருளாளர் பிலால், இளைஞரணி செயலாளர் கரீம், துணை செயலாளர்கள் பரக்கத், நிசார் முஹம்மது, ஷேக் தாவுத், மாணிக்கம், சித்திக், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-it-WING ஈரோடு மேற்கு மாவட்டம் 28.02.2022
தோப்புத்துறையில் மஜக 7ஆம் ஆண்டு துவக்கவிழா.!
பிப்:28.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கொடி நாள் என அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் மனித நேய ஜனநாயக கட்சியினர் கொடியேற்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடியேற்று விழா மாவட்ட துணை செயலாளர் சேக் அஹமத்துல்லாஹ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் மூத்த முன்னோடு சர்புதீன், அவர்கள் பங்கேற்று கொடியேற்றினார். இந்நிகழ்வில் வேதை நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், தோழமை கட்சி நண்பர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING நாகை மாவட்டம். 28.2.2022
கோவையில் மஜக 7ஆம் ஆண்டு விழா.!கொடியேற்றி இரத்தானம் வழங்கி கொண்டாட்டம்!
பிப்:28.மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் மஜக வினர் கொடியேற்றுதல், இரத்ததானம் வழங்குதல், ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல், போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக கோவையில் மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் கொடியேற்றுவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் AK.சுல்தான்அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, ஆகியோர் பங்கேற்று கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் இரத்தானமுகாம் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செபீக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா, அவர்கள் பங்கேற்றார். இந்நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர் . இந்நிகழ்வுகளில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் சிங்கை சுலைமான், ஹனீபா, மற்றும் மாவட்ட அணி, பகுதி, கிளை, நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJKITWING கோவை மாநகர் மாவட்டம் 28.02.2022