டிச.17, புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாக முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் தாளம்பாடி முஜிப் ரஹ்மான் தலைமையில் மஜகவினர் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டனங்களை பதிவு செய்தனர். இதில், மஜக நிர்வாகிகள் ஜஹாங்கிர் பாஷா, ராஜ்மோகன், உதயசூரியன், முஹம்மது ஆரிப், முஹம்மது ராசித், பாட்ஷா மியா உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #பெரம்பலூர்_மாவட்டம். 16/12/2020
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
மதுக்கூரில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மஜகவினர் போராட்டம்!துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா கண்டன உரை நிகழ்த்தினார்!
டிச.14., டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை சேக், கண்டன கோஷம் முழக்கமிட்டார். துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில விவசாய அணி செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இதில் மதுக்கூர் நகர செயளாலர் ரிபாஃயூதீன், நகர பொருளாளர் பைசல் அஹமது, துணை செயளாலர் சாகுல் ஹமீது, இளைஞரணி செயளாலர் சதாம் உசேன், துணை செயலாளர் யஹ்யா, அதிரை நகர செயலாளர் அப்துல் சமது, அதிரை நகர துணை செயலாளர் மர்ஜூக், மற்றும் தோழமை கட்சியினர் போராட்டத்தில் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 14.12.2020
நன்னிலத்தில் டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மஜக போராட்டம்!
டிச.13., டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து 12.12.2020 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தலைமையேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாவட்ட செயலாளர் நஜிபுதீன், அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மருத்துவ சேவைஅணி மாநில துணை செயலாளர் மப்ரூக், அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் நன்னிலம் பகுதி மஜகவினர் கலந்து கொண்டனர். இறுதியில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அப்துல் கலாம் ஆசாத், நன்றியுரை நிகழ்த்தினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம் 12.12.2020
திருவாரூரில் டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மஜக போராட்டம்!மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் கண்டன உரையாற்றினார்!
டிச.13., டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து 12.12.2020 அன்று திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர்சாதிக், அவர்கள் தலைமை தாங்கினார், புலிவலம் சேக் அப்துல்லா, அத்திக்கடை உசேன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் கூத்தாநல்லூர், பொக்குடி, அத்திக்கடை, புலிவலம், பகுதி மஜகவினர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம் 12.12.2020
அதிரையில் காவிரி உரிமை மீட்புகுழு டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டுபோராட்டம்! மஜக பங்கேற்பு!
டிச.13., காவிரி உரிமை மீட்பு குழுவின் சார்பில் டெல்டா மாவட்டம் முழுவதும் வேளாண் கருப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மஜக தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் அதிரை சேக், அவர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை முழங்கினார். இதில் அதிரை நகர செயலாளர் அப்துல் சமது, துணை செயலாளர்கள் நபில், மர்ஜூக், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 12.12.2020