டிச.17,
புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாக முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் தாளம்பாடி முஜிப் ரஹ்மான் தலைமையில் மஜகவினர் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதில், மஜக நிர்வாகிகள் ஜஹாங்கிர் பாஷா, ராஜ்மோகன், உதயசூரியன், முஹம்மது ஆரிப், முஹம்மது ராசித், பாட்ஷா மியா உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#பெரம்பலூர்_மாவட்டம்.
16/12/2020