கடந்த 14.10.2016 அன்று மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவருடன் துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லா, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் ஜப்பார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை பெரிய பள்ளியில் ஜமாத் சார்பில் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு கலந்துரையாடல் நடைபெற்றது. முன்னதாக ஆவணத்தில் பொதுச்செயலாளருக்கு ஆவணம் ஜமாத் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது அவ்வூரில் சமுதாயத்தில் இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று, அப்பணியை மஜக முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜமாத்தினர் கேட்டுக் கொண்டனர். அதுகுறித்து விரைவில் இருதரப்பிலும் பேசி, கண்ணியமான முறையில் சுமுகத்தை ஏற்படுத்த முயற்சி செய்வோம் என பொதுச்செயலாளர் கூறினார். அதன்பிறகு அவ்வூரில் TNTJ மர்கஸுக்கும் சென்று நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடிவிட்டு புறப்பட்டார். தகவல்; மஜக ஊடகப் பிரிவு(தஞ்சை தெற்கு)
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
தஞ்சாவூரில் விவசாய அமைப்புகளின் போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர்!
அக்.14., இன்று தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் நடைப்பெற்றது. அதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,மாநில செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை சேக் அப்துல்லா, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது கபீர், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், IJK சார்பில் சிமியோன் ஆரோக்கியராஜ், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பேரா.ஜெயராமன், தமிழர் தேசிய முன்னணி சார்பில் அயனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க சார்பில் மணிமொழியன், மமக சார்பில் தஞ்சை கலந்தர், தோழர் முகிலன், மருத்துவர் பாரதிசெல்வர், உழவர் உரிமை இயக்க மாநில செயலாளர் புலவர் தங்கராசு மற்றும் தமிழ் உணர்வாளர்களும், விவசாய சங்க தலைவர்களும் கலந்துக் கொண்டனர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு தஞ்சை மாவட்டம்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொஞ்ச நேரம்!
நாகை தொகுதிக்கு உட்பட்ட திட்டச்சேரியில் அரசினர் தொடக்கப்பள்ளிக் கூடத்திற்கு வருகை தந்த M.தமிமுன் அன்சாரி அவர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிலும் வகுப்பிற்கு வருகை தந்து அந்த குழந்தைகளுடன் அளவளாவினார். அந்தக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் அக்கறையோடு விசாரித்தார். இக்குழந்தைகளை பராமரிப்பது இறைவனுக்கு மிகவும் பிடித்த காரியம் என்றும், அரிய சேவை என்றும் ஆசிரியர்களிடம் கூறினார். இக்குழந்தைகளுக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என்றும், அரசு உதவிகளையும் தாண்டி இக்குழந்தைகளுக்கான உதவிகள் மஜக மூலம் செய்து தரப்படும் என்றும் கூறினார். காது கேளாதா, வாய்பேச முடியாத, கைகால் குறையுள்ள, மூளைத்திறன் குறைந்த பல தரப்பட்ட குழந்தைகளும் ஒரு வகுப்பில் கூடியிருந்தும், தங்களுக்குள் மாசற்ற அன்பை பரிமாறிக் கொள்வதும் உள்ளங்களை உணர்வுகளால் உசுப்பியது. அந்த வகுப்பிலிருந்து விடைபெற்றப் போது இதயம் கனமாகவே இருந்தது. MLA அவர்கள் ஒவ்வொரு குழந்தையிடமும் தனித்தனியாக பேசி அவர்களை மனம் நெகிழ தட்டிக்கொடுத்தார். இறைவன் இக்குழந்தைகளுக்கு அருள் புரியட்டும்! தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
மஜக வேலூர்(கி) மாவட்டம் சார்பில் இஃப்தார் (நோன்பு திறப்பு ) நிகழ்ச்சி அழைப்பு
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இஃப்தார்.(நோன்பு திறப்பு ) நிகழ்ச்சி நாள்:- 01/07/2016. இடம்:- K.M.K திருமண மண்டபம் வெள்ளிக்கிழமை. சைதாப்பேட்டை மாலை-5மணிக்கு. வேலூர்(கி) மாவட்டம் சிறப்பு அழைப்பாளர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலாளர் ஜனாப்:- M.தமிமுன் அன்சாரி MA.MLA நாகை சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஜனாப்:- S.S.ஹாரூன் ரஷீத்.M.com மனிதநேய ஜனநாயக கட்சி மாநில அவைத்தலைவர் ஜனாப்:- மெளலவி S.S.நாசர் உமரி மற்றும். மாநில ,மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் வருக..! வருக. என வரவேற்க்கின்றோம்..! இவன் #மனிதநேய_ஜனநாயக_கட்சி