நாகை மீனவர் பஞ்சாயத்து சார்பில் மஜகவுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதில் மத்திய அரசுடன் சமீபத்தில் பேசியிருப்பதாகவும் , அவர்கள் துரித நடவடிக்கையை மேற்கொள்ள விருப்பதாகவும் , எனவே தற்காலிகமாக ரயில் மறியலை ஒத்திவைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள் . அவர்களின் வேண்டுகோளை ஏற்று 12 – 07 - 2016 அன்று மதியம் நடைபெறவிருந்த மஜகவின் ரயில் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது . இவண் செ.செய்யது ரியாசுதீன் மாவட்ட செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி நாகை தெற்கு மாவட்டம்
நாகப்பட்டிணம்
சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு முயர்ச்சிக்க கோரி இரயில் மறியல்
சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு முயர்ச்சிக்க கோரி மஜக ஆர்ப்பாட்டம்
நாகை வடக்கு மாவட்டம் நக்கம்பாடியில் மஜக உதயமானது.
ஜுன்-10 அன்று மாலை 4:30 மணியளவில் நக்கம்பாடியில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை கூட்டத்தில் கிளை செயலாளராக S.முபாரிஸ், கிளை பொருளாளர் A.முகம்மது ஷேக் ,H.முஹம்மது ஹாலித், S.சமீர் அக்தர், S.சாகுல் ஹமீது இளைஞரணி செயலாளராக J.பாசித் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் N.M.மாலிக் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் A.J.சாகுல் ஹமீது,கிளியானுர் அபுசாலி, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் தைக்கால் ஷாஜஹான் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் இறுதியில் கிளை செயற்குழு உறுப்பினர் I.முனவர்தீன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. -மஜக ஊடகபிரிவு
துளசியாப்பட்டிணத்தில் மஜக பொதுச்செயலாளர்
நேற்று மாலை நாகை மாவட்டம் துளசியாப்பட்டிணத்திற்கு மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி MLA அவர்கள் வருகை புரிந்தார்.மஃரிப் தொழுகைக்கு பிறகு அவ்வூர் மக்களுடன் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது தங்கள் ஊருக்கு #சாலை_வசதிகள் மேம்பாடு மற்றும் #ஆரம்ப_சுகாதார_நிலையம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்து தரும்படி அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் அவர்களுடன் பேசுவதாக பொதுச்செயலாளர் கூறி விடைபெற்றார். பிறகு ஜமாத் துணைத்தலைவர் குஞ்ஞாலி மரைக்காயர் அவர்களை வீட்டில் சந்தித்து உரையாடிவிட்டு புறப்பட்டார். -மஜக ஊடகப்பிரிவு