ஜூலை.16, மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் (MKP) சார்பாக கத்தாரில் சிக்கித் தவித்த தமிழர்கள் தாயகம் திரும்பிடும் வகையில், இரண்டாம் கட்டமாக MKP கத்தார் மண்டலம் சார்பாக வந்தே பாரத் திட்டத்தில் திருவனந்தபுரம் (கேரளா), சென்னை ஆகிய விமான நிலையங்களுக்கு பயணசீட்டுகள் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டது. மேலும், திருவனந்தபுரம் வந்திறங்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு குமரி மாவட்ட மஜக-வினர் அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்து அவர் அவர் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். இன்று தாயகத்திற்கு செல்லும் தமிழர்களை வழியனுப்பும் நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன், மண்டல பொருளாளர் நாகை பரமானுல்லா, துணைச் செயலாளர்கள் ஆயங்குடி யாசீன், சிதம்பரம் நூர் அஹமத், மண்டல ஆலோசகர் பரங்கிப்பேட்டை ரஜ்ஜாக் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல், #மனிதநேயகலாச்சாரப்பேரவை #MKPitWING #கத்தார்_மண்டலம்.
அயலகச் செய்திகள்
பாசிச சிந்தாந்தத்தை வழுவாக எதிர்க்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரணியில் திரள_வேண்டும்..!
கத்தாரில்மஜகபொருளாளர்எஸ்எஸ்ஹாரூன்ரசீது_சூழுரை..!! கத்தார்.டிசம்பர்.08., கத்தார் தலைநகர் தோஹாவில் மஜக சார்பு அயல் நாட்டுபிரிவான மனிநேய கலாச்சார பேரவையின் சார்பாக கடந்த (06.12.2019) அன்று மாலை சிறப்பு கருத்தரங்கம் "சகிப்புத்தன்மையால் சமுதாயம் அடையும் நன்மைகள்" எனும் தலைப்பில் நடைபெற்றது. கருத்தரங்கத்தை இறைவசனம் ஓதி கைஸ் துவக்கிவைத்தார்கள். இக்கருத்தரங்கத்திற்கு MKP மண்டல துணைச் செயலாளர் சிதம்பரம் நூர் முஹம்மத் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது கலந்து கொண்டார்கள். தோஹா மாநகரச் செயலாளர் ஷேக் அலாவுதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சனையா மாநகரச் செயலாளர் பரங்கிப்பேட்டை ஃபாரூக் வரவேற்புரை நிகழ்த்தினார்கள், அதைத்தொடர்ந்து மண்டல துணைச்செயலாளர் திருச்சி நசீர் பாஷா, Alkhor முன்னால் மாநகரச் செயலாளர் நிஸார் ஆகியோர் பாபர் மஸ்ஜிதின் அநீதியான தீர்ப்பை இஸ்லாமியர் அமைதியாக எதிர்கொண்ட விதம், இஸ்லாமியர்களுக்கு ஒட்டு மொத்த இந்துக்களின் பேராதரவை எவ்வாறு அளித்தனர் போன்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்கள். இரண்டாம் அமர்வில் கத்தார் QTv நிர்வாகி சகோதரர் சுஜா உலகெங்கிலும் உள்ள தமிழ் மொழி பேசும் மதம், ஜாதி கடந்து எவ்வாறு ஒன்றினைய வேண்டும் என்று கருத்துரையாற்றினார். https://m.facebook.com/story.php?story_fbid=2141699259263171&id=700424783390633 இந்நிகழ்வில்