மே.26., இன்று காயல்பட்டிணம் வா வு வஜிஹா மகளிர் கல்லூரி நிர்வாகத்தின் அழைப்பினை ஏற்று மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அங்கு வருகை தந்தார் . கல்லூரி நிர்வாகியும் , முன்னால் காயல்பட்டிணம் நகர்மன்றத் தலைவருமான செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களும் , நிர்வாக துணைச் செயலாளர் அஹ்மது இஷாக் உள்ளிட்டோரும் வரவேற்றனர் . பொதுச் செயலாளருடன் , பொருளாளர் ஹாரூன் , மாநிலச் செயலாளர்கள் தைமிய்யா , நாச்சக்குளம் தாஜுதீன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர் . தேனீர் விருந்துடன் நடைபெற்ற இச்சந்திப்பின் போது சமுதாய அரசியல் குறித்தும் , கல்வி விவகாரங்கள் குறித்தும் உரையாடப்பட்டது . - மஜக ஊடகப்பிரிவு
Author: admin
INTJ தலைவர்களுடன் மஜக தலைவர்கள் சந்திப்பு
இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்திற்கு மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA , துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் . ராவுத்தர்ஷா , மாநிலச் செயலாளர்கள் தைமிய்யா மற்றும் நாச்சிக்குளம் . தாஜூதீன் ஆகியோர் வருகை தந்தனர் . அங்கு சகோதரர் S.M. பாக்கர் , முனீர் , மெய்தீன் ஆகியோர் வரவேற்றனர் . நாகப்பட்டினம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக-மஜக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை செய்ததற்கு பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நன்றி தெரிவித்துக் கொண்டார் . இது தவிர வழக்கமான நட்பு சார்ந்த உரையாடல்களுடன் முக்கால் மணி நேரத்திற்கு மேல் இச்சந்திப்பு நடைபெற்றது . - மஜக ஊடகப்பிரிவு
6வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் அம்மாவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்து
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) தமிழ்நாட்டின் முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்றிருக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் #டாக்டர்_அம்மா அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம் . 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக ஆட்சி செய்யும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய தமிழக மக்களுக்கு எங்களது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் . முதல்வராக பொறுப்பேற்ற 1 மணி நேரத்திற்குள் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றும் வகையில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டுருப்பது தமிழ் நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது . பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை குறைத்திருப்பதும் , முதல்கட்டமாக 500 கடைகள் மூடப்படும் என அறிவித்திருப்பதும் பெரும் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது . கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி , 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் தள்ளுபடி , தாலிக்கு 1 பவுன் தங்கம் , நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 750 யூனிட்டாக உயர்த்தி இருப்பது என
12ஆம் வகுப்பு வெற்றியாளர்களுக்கு மஜகவின் வாழ்த்துக்கள் .!
இவ்வாண்டு +2 தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் . போட்டிகளும் , நெருக்கடிகளும் நிறைந்த நவீன உலகில் , உங்களின் எதிர்காலத்திற்கும் , இயற்கை அறிவிற்கும் ஏற்ற உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதில் கூரிய கவனம் செலுத்த வேண்டும் . வசந்த காலத்தின் வண்ணப் பறவைகளாய் சிறகு விரிக்க தயாராகுங்கள் . இத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் , நம்பிக்கையை இழக்காமல் உத்வேகத்துடன் அடுத்த முயற்சியில் ஈடுபடுங்கள் . விழுவது வீழ்வதற்கல்ல .... எழுவதற்கே என்பதை எண்ணி மன உறுதியோடு புறப்படுங்கள் . அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..! அன்புடன் M. தமிமுன் அன்சாரி பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18-05-2016