இன்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் மாண்புமிகு சி.வி.சண்முகம் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை கையளித்தார். சிறைக் கைதிகளின் மனித உரிமைகள் குறித்தும், அவர்களின் உயிராபத்து நோய்களுக்கு உரிய உயர் சிகிச்சை அளிப்பது குறித்தும், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அம்மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் மற்றும் கோவை மாவட்ட மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர். தகவல்: மஜக ஊடகப்பிரிவு(சென்னை)
Author: admin
மஜகவின் மாநில மீனவர் அணி செயலாளர் பார்த்தீபனுடன் மஜக பொதுச்செயலாளர் நலம் விசாரிப்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்தீபன் அவர்கள் கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராயபுரம் நாசர், வட சென்னை மாவட்ட செயலாளர் அஜீம்,மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர். மஜக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அலைபேசியில் தொடர்புகொண்டதை மகிழ்ச்சியுடன் கூறியவர், இக்கட்சியில் இருப்பதற்காக பெருமைப்படுவதாக நெகிழ்ந்தார். தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவதால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற செல்வதாக கூறினார். அவர் பூரண நலம் பெற இறைவன் அருள் புரியட்டும்! பார்த்தீபன் தொடர்புக்கு; 9551639723 தகவல்; மஜக ஊடகப்பிரிவு-சென்னை
நெய்வேலி போராட்டத்தில் ஏராளமான மஜகவினர் கைது
அக்.18.,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் மஜக சார்பில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஐ. இப்ராஹிம், மாநிலசெயற்குழு உறுப்பினர் பி. ஷாஜகான், மாவட்ட பொருளாளர் சலீம் மற்றும் ஏராளமான மஜக தொண்டர்கள் கலந்துகொண்டு கைதாகினர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு (கடலூர் வடக்கு)
இரயில் மறியல் போரட்டத்திற்கான பதாகை மற்றும் முழக்கங்கள்
பட்டுக்கோட்டை மற்றும் ஆவணம் ஜமாத்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர்!
கடந்த 14.10.2016 அன்று மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவருடன் துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லா, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் ஜப்பார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை பெரிய பள்ளியில் ஜமாத் சார்பில் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு கலந்துரையாடல் நடைபெற்றது. முன்னதாக ஆவணத்தில் பொதுச்செயலாளருக்கு ஆவணம் ஜமாத் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது அவ்வூரில் சமுதாயத்தில் இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று, அப்பணியை மஜக முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜமாத்தினர் கேட்டுக் கொண்டனர். அதுகுறித்து விரைவில் இருதரப்பிலும் பேசி, கண்ணியமான முறையில் சுமுகத்தை ஏற்படுத்த முயற்சி செய்வோம் என பொதுச்செயலாளர் கூறினார். அதன்பிறகு அவ்வூரில் TNTJ மர்கஸுக்கும் சென்று நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடிவிட்டு புறப்பட்டார். தகவல்; மஜக ஊடகப் பிரிவு(தஞ்சை தெற்கு)