Author: admin
பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்…
1500 பேர் பங்கேற்க கோவை மாநகர் மாவட்ட மஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்... மாநில செயலாளர் M.H.ஜாபர்Bஅலி பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்… ஜன.25., மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் M.H.ஜாபர் அலி, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் PMA.பைசல் ஆகியோர் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக பேசினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்டத்தில் இருந்து 1500-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் M.சுலைமான், மாவட்டத் துணைச் செயலாளர்கள்d ஹனீப், A.S.ஜாபர் சாதிக், அன்வர் பாஷா, இளைஞரனி செயலாளர் MMR.முஜீப், இளைஞர் அணி பொருளாளர் அசார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பயாஸ், பொருளாளர் அப்துல் சலீம், துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், அப்துல் ரஹ்மான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பைரோஸ் கான், அபு, இப்ராஹிம், அபி,
திருப்பூர் – பல்லடத்த சேர்ந்த #நியூஸ்_7 செய்தி தொலைக்காட்சியின் நிருபர் #நேச_பிரபு கள்ளச்சாராய கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டிருப்பதை வன்மையாக #மஜக கண்டிக்கிறது மக்களின் குரலாய் செயல்படும் செய்தியாளர்களின் பாதுகாப்பு என்பது ஜனநாயகத்தின் பாதுகாப்பாகும். #JournalistNesaPrabu
திருத்துதுறைப்பூண்டியில்… வாண்டையார் இல்ல மணவிழா… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
ஜனவரி.24., பிராந்தியங்கரை திரு. STR இல்ல திருமண வரவேற்பு விழா இன்று திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்றது. மணமகன் GMM பிரஜித் வாண்டையார், மணமகள் Dr. விஜயப்ரதா ஆகியோரை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்தி சிறப்பித்தார். இதில் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் திரு. ஸ்ரீதர் வாண்டையார், பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் திரு. நெய்னார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் திரு. காமராஜ், திரு. 0.S.மணியன் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்துக் கொண்டனர். இதில் மஜக மாவட்ட பொருளாளர் ரஹ்மதுல்லா BE, மஜக IT மாவட்ட செயலாளர் கட்டிமேடு ஆசிப், மஜக ஒன்றிய செயலாளர் நிஜாம் மைதீன், முன்னால் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பைசல், கட்டிமேடு கிளை செயலாளர் ஹாரிஸ், எடையூர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம் 24.01.2024.