மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட செயலாளராக, அப்துல் அக்கீம் த/பெ.சாகுல் அமீது 42/11, சரளைக்காடு, மாஸ்கோ நகர், சிக்கண்ணா காலேஜ் ரோடு, திருப்பூர் 641603. அலைபேசி; 9500786715/ 9655578630 மாவட்டப் பொருளாளராக, சையது இப்ராஹீம் த/பெ; சேக்அலி குலாம் காதர் கார்டன், 7-வது வீதி, ஜீ.கே, திருப்பூர் 641603 அலைபேசி; 9042423782 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; M.H.ஜாபர் அலி பொறுப்பாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் 16.02.2024.
Author: admin
இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்! மஜகவில் 10 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க திட்டம்! தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு..
பிப்ரவரி.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் தலைமையகத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் ஃபைசல் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாநில செயலாளரும், இளைஞர் அணி மேலிட பொறுப்பாளருமான நாகை முபாரக், இளைஞர் அணி பொருளாளர் கோவை. ஃபைசல், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ரமேஷ் தேவர் ஆகியோர் பங்கேற்று கருத்து பரிமாற்றங்களை செய்தனர். இதில் ஜூன் 1 முதல் டிசம்பர் 31 வரை 6 மாத காலத்தில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட 10 ஆயிரம் புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது என்றும், அதற்கான வேலைத்திட்டத்தை 'மஜக 2.0' என்ற பெயரில் முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அவர்களில் 1000 பேரை தேர்வு செய்து மண்டல வாரியாக 5 கட்டமாக அரசியல் பயிலரங்குகளை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. பல்வேறு சமுதாய இளைஞர்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில், அதற்கேற்ப வியூகங்களை வகுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இளைஞர்களின் கவன ஈர்ப்பு கட்சியாக வளர்ந்திருக்கும் மஜக புத்தெழுச்சிமிக்க புதிய தலைமுறையினரை 'சமூக நீதி - ஃபாசிச எதிர்ப்பு ' என்ற இரட்டை கருத்தியலில்
ஒரே நாடு – ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் நிலை பாட்டுக்கும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை தமிழ்நாட்டில் குறைக்க வேண்டும் என்ற நிலை பாட்டை எதிர்த்தும் சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. #OneNationOneElection.
10 ஆயிரம் ட்ராக்டர்களுடன் டெல்லிக்கு புறப்பட்ட விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், கண்ணீர் புகை குண்டு வீச்சுகளும் கண்டணத்திற்குரியது. ஒன்றிய அரசின் விருப்பத்திற்கேற்ப அரியானா பாஜக அரசும் வரம்பு மீறியுள்ளது. விவசாயிகளின் பக்கமே நாடு உள்ளது என்பதை ஒன்றியம் உணர வேண்டும்.
மஜக பொதுக்குழு பணிகள் தலைமையகத்தில் பணிகள் தீவிரம்
பிப்ரவரி.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு எதிர்வரும் பிப்ரவரி 28, 2024 அன்று நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அழைப்பிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கியிருக்கிறது. தலைமையகத்தில் நிர்வாகிகள் அவற்றை ஒழுங்குப்படுத்தி வருகிறார்கள். மேலும் பொதுக்குழு தொடர்பான இதர பணிகள் குறித்த திட்டமிடல்களும் தலைமையகத்தில் நடந்த வண்ணம் உள்ளது. தற்போது தலைமையக பணிகள் மாநிலச் செயலாளர் நாகை. செய்யது முபாரக் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுபோல் அலுவலக செயலாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் சிவகங்கை அபுதாகீர் அவர்களும் செயல்பட்டு வருகிறார். வழக்கமான அலுவலக நேரம் காலை 10.30 முதல் மாலை 7.30 வரை என்றாலும், பொதுக்குழு பணிகள் காரணமாக நிர்வாகிகள் வந்த வண்ணமுள்ளதால் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 14.02.2024.