மார்ச்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ஸ்ரீபெரும்புதூர் நகரத்தில் நகர செயலாளர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. நிகழ்வை மாநிலத் துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான S.M.நாசர் மற்றும் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் ரஹ்மான் கான் ஆகியோர் கலந்துக்கொண்டு துவக்கிவைத்தனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் கட்சியின் துண்டறிக்கையை பெற்று மஜக-வின் உறுப்பினராக இணைந்தனர். உறுப்பினராக இணைந்த பலர் மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அரசியல் பணிகளை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நகர பொருளாளர் அப்துல் அஜீஸ், நகர துணை செயலாளர் சனாவுல்லாஹ், இளைஞர் அணி செயலாளர் அசரஃப் அலி, துணைச்செயலாளர் முகமது ரஃபீக், வணிகர் அணி நகர செயலாளர் அலாவுதீன், மற்றும் நசுருதீன், அபினாஷ், சுரேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #காஞ்சிபுரம்_மாவட்டம் 01.03.2024.
Author: admin
விருந்தோம்பல் மஜக பொதுக்குழுவில் ருசிகரம்…
மார்ச்.02., கடந்த பிப்-28 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற மஜக பொதுக் குழுவில் நடைபெற்ற விருந்தோம்பல் பொதுக் குழுவுக்கு வந்த நிர்வாகிகளை வயிறார வாழ்த்த வைத்தது. புருணே மண்டல மஜக சார்பில் செய்யப்பட்ட காலை, மதிய விருந்துகள் எல்லோரையுமே அசத்தியது. காலையிலேயே சுடசுட தேனீர் வழங்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. காலை வெண் பொங்கல், வடை, இட்லி என உயர்ரக சைவ உணவுகள் பரிமாறப்பட்டது. மதியம் நீடுரில் செய்யப்பட்ட 'டெல்டா மட்டன் பிரியாணி' unlimited என பரிமாறப்பட்டது. ஃபிர்னி, சிக்கன் 65, கத்தரிக்காய் மற்றும் வெங்காய பச்சடி, மினரல் போத்தல் என திருமண விருந்து போல இருந்ததை எல்லோருமே மெச்சினர். மாநில செயலாளர்கள் நாகை, முபாரக், வல்லம் அகமது கபீர், நெய்வேலி இப்ராகிம், ஆகியோருடன் மாநில துணைச் செயலாளர்கள் அசாருதீன், ஜாவித், புதுக்கோட்டை துரை முகம்மது, கோட்டை ஹாரிஸ், பேரா. அப்துல் சலாம், ஓசூர் நவ்சாத், ஆகியோரும் அனைவரையும் உபசரித்த வண்ணமிருந்தனர். MJVS மாநிலச் செயலாளர் பிஸ்மில்லாகான், MJTS மாநில பொருளாளர் மதுரை கனி, MJTS மாநில துணைச் செயலாளர்கள் மாத்தூர் இப்ராகிம், கண்ணன் உள்ளிட்ட மாநில அணி பொறுப்பாளர்களும், மயிலாடுதுறை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளும் விருந்தோம்பல்
கொடியேற்றத்துடன் தொடங்கிய மஜக பொதுக்குழு குத்துச்சண்டை வீரர்களும் குட்டிக்கரணம் அடிப்பவர்களும் ஒன்றா? தலைவர் மு.தமிமுன் அன்சாரி_பேச்சு…
மார்ச்.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு பிப்ரவரி 28 அன்று காலை மயிலாடுதுறையில் AJK மண்டபத்தில் நடைபெற்றது. முதல் நாள் இரவு 10 மணி முதலே தூர மாவட்ட நிர்வாகிகளின் வருகை தொடங்கியது. காலை 4 மணி முதல் அதிகமானோர் வரத் தொடங்கினர். அவர்களை ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வரவேற்று அழைத்து செல்ல மயிலாடுதுறை (மேற்கு) மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மண்டபத்தின் வளாகம் பரந்து விரிந்து பெரிதாக இருந்ததால் நிர்வாகிகள் ஒன்று கூடி எடுத்து வந்த வாகனங்களை நிறுத்த இடம் வசதியாக இருந்தது. அந்த வளாகத்தில் பள்ளியும், தர்ஹாவும் இருந்தால் ஓய்வெடுக்கவும், தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் வசதியாய் இருந்தது என நிர்வாகிகள் தெரிவித்தனர். பொதுக்குழு அரங்கின் நுழைவாயிலுக்கு மறைந்த முன்னாள் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மாயவரம். மாலிக் அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கே தூர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சாப்பிடும் வகையில் காலை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உபசரிக்கப்பட்டது. மதியம் சுவையான டெல்டா பிரியாணியும் தயாராகி இருந்தது. இருவேளை உணவையும் புருணே மண்டல மஜக-வினர் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8.30 மணி முதலே வருகைப் பதிவுகள் தொடங்கியது. பொருளாளர் J.S.ரிஃபாயி, இணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது
நவீன உறுப்பினர் சேர்க்கை மஜக பொதுச்செயலாளர் மெளலா நாசர் தொடங்கி வைத்தார்….
மார்ச்.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு மயிலாடுதுறையில் கடந்த 28.02.2024 அன்று நடைபெற்றது. அப்போது QR CODE மூலம் நவீன முறையில் உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை பொதுச் செயலாளர் மெளலா. நாசர் அவர்கள் தொடங்கி வைத்தார். இது பொதுக்குழுவில் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், இனி முறையாக மஜக நிகழ்ச்சிகளில் புதிய உறுப்பினர் சேர்ப்புக்கு இந்த முறை செயலாக்கம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 28.02.2024.
இஸ்ரேலிய பயங்கரவாதம் காஸாவில் உணவுக்காக காத்திருந்த நூற்றுக்கும் மேலானோரை கொன்ற கொடுமை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்….
கடந்த ஐந்து மாதங்களாக பலஸ்தீனத்தின் காஸா நகர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் அரச பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் 30 ஆயிரத்தை கடந்துள்ளது. 12,660 குழந்தைகள் - சிறுவர்கள், 8,570 பெண்கள், 1049 முதியவர்கள், 340 மருத்துவ பணியாளர்கள், 152 ஐ.நா. ஊழியர்கள், 200 செய்தியாளர்கள் ஆகியோர் இதில் அடக்கம். உலக நாடுகளின் அழுத்தமான வேண்டுகோள்களையும், ஐக்கிய நாட்டு சபையின் தீர்மானங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் நடத்தி வரும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான பயங்கவாத யுத்தம் உலக மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவமனைகள், கல்வி கூடங்கள், அகதி முகாம்கள் என மனித உரிமைகளை பற்றியே சிந்தனைகளே இல்லாமல் நடத்திய கொடூர தாக்குதல்களால் இன்று சர்வதேச அரங்கில் இஸ்ரேல் தனித்து விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று காஸா சிட்டியின் - அல் - ந பூசி என்ற இடத்தில் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பெறுவதற்காக நின்றிருந்த பலஸ்தீனர்கள் மீது, இஸ்ரேல் படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 300 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த திடீர் பேரழிவால் போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் காயமடைந்தோர் துடிதுடித்து கதறுவதாக வரும் செய்திகள் எல்லோரையும் துயரத்தில்